Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் ஹோட்டலில் துப்பாக்கி சூடு - 3 பேர் பலி

அமெரிக்காவில் ஹோட்டலில் துப்பாக்கி சூடு - 3 பேர் பலி

29 புரட்டாசி 2025 திங்கள் 06:42 | பார்வைகள் : 5632


அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணம் சவுத் போர்ட் யார்ட் பஸ்னி பகுதியில் கடற்கரை பகுதி அருகே ஹோட்டல் ஒன்றில் துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது.

படகில் வந்த மர்ம கும்பல் படகில் இருந்தவாறு கடற்கரை அருகே உள்ள ஹோட்டல் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளதோடு, 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற பொலிஸார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர். மேலும், இந்த துப்பாக்கி சூடு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.