பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்தவர்களுக்கு நேர்ந்த துயரம்! - மூவர் மருத்துவமனையில்!!
27 மாசி 2026 வெள்ளி 07:00 | பார்வைகள் : 3764
பரிசில் உள்ள பஸ் தரிப்பிடம் ஒன்றில் காத்திருந்தவர்கள் மீது மகிழுந்து ஒன்று பாய்ந்ததில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
பரிஸ் 10 ஆம் வட்டாரத்தின் Rue du Faubourg Saint-Denis வீதியில் இருந்த தரிப்பிடத்தில் இச்சம்பவம் பெப்ரவரி 24, செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. மாலை 4.45 மணி அளவில் G7 டக்ஸி கார் ஒன்று திடீரென பஸ் தரிப்பிடத்துக்குள் வேகமாக நுழைந்தது. இதில் அங்கிருந்தவர்களில் மூவர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கார் கட்டுப்பாட்டை இழந்தது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறித்த பேருந்து தரிப்பிடம் 302 ஆம் இலக்க பேருந்துகள் நிறுத்தும் தரிப்பிடமாகும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan