Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல் - ஈரானில் 555 பேர் பலி

அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல் - ஈரானில் 555 பேர்  பலி

2 பங்குனி 2026 திங்கள் 14:55 | பார்வைகள் : 2027


அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியா நடத்திய தாக்குதல்களில் ஈரானில் 555 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானிய உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி நாங்கள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று தெரிவித்தார்.

ஈரான் மற்றும் ஈரானிய ஆதரவுபெற்ற போராளிகள் இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகள் மீது ஏவுகணைகளை வீசினர்.

அத்துடன் குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தை தாக்கியதாகவும் தெரிகிறது.
 
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானில் இதுவரை குறைந்தது 555 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஈரானிய ரெட் கிரசண்ட் சொசைட்டி தெரிவித்துள்ளது.

மேலும், நாடு முழுவதும் 130க்கும் மேற்பட்ட நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

இஸ்ரேலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.