இஸ்ரேலின் அடுத்த இலக்கு - ஈரான் நாட்டின் அடுத்த உச்ச தலைவர்....?
4 பங்குனி 2026 புதன் 09:51 | பார்வைகள் : 1591
கடந்த சில நாட்களாக இஸ்ரேல் மற்றும் ஈரான் உடனான போர் தீவிரமடைந்து வருகின்றது.
இந்நிலையில் ஈரான் நாட்டின் அடுத்த உச்ச தலைவராக யாரைத் தேர்வு செய்தாலும், அவர் "அழிக்கப்பட வேண்டிய இலக்கா
க" இருப்பார் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் , ஈரான் நாட்டின் அடுத்த உச்ச தலைவராக யாரைத் தேர்வு செய்கிறாரோ, அவர் "அழிக்கப்பட வேண்டிய இலக்காக" இருப்பார் என்று அச்சுறுத்தினார்.
இஸ்ரேல் காட்ஸ் தனது x தள அறிக்கையில்,
"இஸ்ரேலை அழிக்கவும், அமெரிக்காவையும் சுதந்திர உலகத்தையும் பிராந்திய நாடுகளையும் அச்சுறுத்தவும், ஈரானிய மக்களை அடக்கவும் திட்டத்தைத் தொடரவும் வழிநடத்தவும் ஈரானிய பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு தலைவரும் ஒழிப்புக்கு இலக்காக இருப்பார்கள்" என்று அவர் கூறியுள்ளார்.
புதிய உச்ச தலைவரைத் தேர்ந்தெடுக்கும் ஈரானின் நிபுணர்கள் சபையுடன் தொடர்புடைய ஒரு கட்டிடத்தை இஸ்ரேல் செவ்வாயன்று குறிவைத்தது.
கடந்த சனிக்கிழமை நடந்த ஒரு தாக்குதலில் 86 வயதான அயதுல்லா அலி கமேனியைக் இஸ்ரேல் தாக்கி படுகொலை செய்தமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan