ஆயிரக்கணக்கான அவுஸ்திரேலியர்கள் ஆபத்து... அபாய எச்சரிக்கை விடுப்பு
1 மாசி 2026 ஞாயிறு 17:22 | பார்வைகள் : 2944
அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு தட்டம்மை நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியா மாநிலத்தின் சுகாதாரத் துறை 20க்கும் மேற்பட்ட நோய் பரவல் இடங்களின் பட்டியலை வெளியிட்டது.
இரண்டு புதிய தட்டம்மை நோயாளிகள் கண்டறியப்பட்டதை உறுதிப்படுத்திய நிலையில், 2026ஆம் ஆண்டில் மாநிலத்தில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
இந்த அனைத்து நோய்த்தொற்றுகளும், தென்கிழக்கு மற்றும் தெற்காசியாவிற்கான வெளிநாட்டுப் பயணத்துடன் தொடர்புடையவை என்று கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, விக்டோரியாவில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு தட்டம்மை நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனைகள், விமான நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உட்பட, குறிப்பிடப்பட்ட திகதிகள் மற்றும் நேரங்களில் இந்த நோய் பரவல் இடங்களுக்கு சென்றவர்கள், தங்கள் வருகைக்குப் பிறகு 18 நாட்கள் வரை தட்டம்மை நோயின் அறிகுறிகளைக் கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan