Paristamil Navigation Paristamil advert login

ஈரானின் இராணுவ இலக்குகள் மீதான தாக்குதல்களுக்காக தயாராகும் அமெரிக்கா

ஈரானின் இராணுவ இலக்குகள் மீதான தாக்குதல்களுக்காக தயாராகும் அமெரிக்கா

26 பங்குனி 2026 வியாழன் 05:56 | பார்வைகள் : 1603


ஈரானின் இராணுவ இலக்குகள் மீதான தாக்குதல்களுக்காக, 'யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்' விமானம் தாங்கி போர்க்கப்பல் பிராந்திய கடல் எல்லைகளிலிருந்து தனது வான்வழி நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

குறித்த போர்க்கப்பலைக் குறிவைத்துத் தாம் க்ரூஸ் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாகவும், அதன் காரணமாகக் கப்பலின் நிலையை மாற்ற வேண்டியிருந்தது என்றும் ஈரான் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து அமெரிக்கா இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

அமெரிக்க அதிகாரிகள் தமது நடவடிக்கைகளுக்கு எவ்விதத் தடையுமில்லை என்றும், திட்டமிட்டபடி ஈரானிய இலக்குகள் மீது போர்க்கப்பலிலிருந்து தாக்குதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.