ரஷ்யாவின் இரண்டு முக்கிய நகரங்களில் உக்ரேனிய ட்ரோன் தாக்குதல்கள்
25 சித்திரை 2026 சனி 21:43 | பார்வைகள் : 1953
ரஷ்யாவின் இரண்டு முக்கிய நகரங்களில் உக்ரேனிய ட்ரோன் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
ரஷ்யாவின் நான்காவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமான Yekaterinburg-யில் உள்ள ஒரு உயரமான குடியிருப்பு கட்டிடத்தில் இருந்து புகை எழுவதை சமூக ஊடங்களில் வெளியான காணொளிகள் காட்டின.
ஸ்வெர்ட்லோவ்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள இந்நகரில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
இதனை உறுதிப்படுத்திய ஆளுநர் டெனிஸ் பாஸ்லர், இதில் யாரும் உயிரிழக்கவில்லை என்றும், ஆனால் 6 பேர் காயமடைந்ததாகவும் கூறினார்.
அதேபோல் கஜகஸ்தானை ஒட்டியுள்ள செலியாபின்ஸ்க் பிராந்தியத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆனால், அங்குள்ள ஒரு வளாகத்தின் மீதான தாக்குதல் தடுக்கப்பட்டதாகவும், உயிரிழப்போ அல்லது சேதமோ ஏற்படவில்லை என்றும் அப்பிராந்தியாயத்தின் ஆளுநர் தெரிவித்தார்.
உக்ரேனிய கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து 1,700 கிலோமீற்றருக்கும் அதிகமான தொலைவில் உள்ள செலியாபின்ஸ்க், ஸ்வெர்ட்லோவ்ஸ்க் பகுதிகள் தாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
அதே சமயம் இரவோடு இரவாக 127 ட்ரோன்களை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan