குழந்தைகள் பெயர்
Fille
Garçon
| Name | Numerology No | Total |
A யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்? - வாசிக்க |
| A எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள்
முதலில் பெயரின் முதல் எழுத்தாக A அமைந்தவர்களின் இயல்புகளைப் பார்ப்போம். A என்பது ஆங்கில எழுத்துக்களின் முதல் எழுத்தாகும். இந்த எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் இயற்கையாகவே வலிமை, ஆற்றல் மற்றும் தலைமைத்துவ குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். சூரியனின் ஒளிக்கதிர்களைப் போல அவர்கள் எப்போதும் திகழ்ந்து, பிறரின் கவனத்தை ஈர்ப்பார்கள். இவர்கள் மக்களால் மிகவும் நேசிக்கப்படுவார்கள். தங்களது கருத்தில் உறுதியாக இருப்பார்கள். அரசியல், ஆன்மீகம், மருத்துவம் போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் திறன் பெற்றவர்கள். இவர்களின் பேச்சைக் கவனமாகக் கேட்க பலர் விரும்புவார்கள். இவர்களுக்கு உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கும். கண் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் அவ்வப்போது ஏற்படலாம். உடல் அமைப்பு ஒல்லியாக இருக்கும். காதல் வாழ்க்கையில் ஈர்ப்பு அதிகமாக இருந்தாலும், அனைவரிடமும் மரியாதையுடன் நடந்து கொள்வார்கள். கிழக்கு நோக்கிய வீட்டில் வசிப்பது இவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று கூறப்படுகிறது. இவர்கள் அதிகாரத் தன்மையுடன் பேசுவார்கள். யாருக்கும் அடங்கி நடக்க விரும்பமாட்டார்கள். எந்தப் பொறுப்பையும் ஏற்றாலும் சுதந்திரமாக செயல்பட விரும்புவார்கள். மற்றவர்களுக்குக் கீழ் பணிபுரிவதை விரும்பமாட்டார்கள். பொறுப்புணர்வு அதிகம். கல்வியிலும் திறமையாளர்கள். வாழ்க்கையில் விரைவாக முன்னேற்றம் அடைவார்கள். உறுதியான மனநிலையும் தெளிவான சிந்தனையும் இவர்களின் பலமாகும். எந்தச் செயலிலும் வெற்றியே இவர்களின் இலக்காக இருக்கும். தோல்வியையும் வெற்றியாக மாற்றும் திறன் கொண்டவர்கள். புதிய சிந்தனைகள் மற்றும் ஆக்கபூர்வமான செயல்களில் ஆர்வம் காட்டுவார்கள். இரவுப் பொழுதுகளை அதிகம் விரும்பமாட்டார்கள். எப்போதும் சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருப்பதை விரும்புவார்கள். நேர்மை, வெளிப்படைத் தன்மை மற்றும் கபடமற்ற குணம் இவர்களின் சிறப்பாகும். நல்ல நண்பர்களை எளிதில் பெற்றுக்கொள்வார்கள். நிர்வாகத் திறன் மிகுந்தவர்கள். சமூக நலனிலும் நாட்டின் முன்னேற்றத்திலும் அக்கறை காட்டுவார்கள். அறிவு, தலைமைத்துவம், சுதந்திர உணர்வு, பொறுப்புணர்வு போன்ற சிறந்த குணங்களைக் கொண்டவர்கள். மொத்தத்தில் அதிர்ஷ்டசாலிகள். ஆலோசனை: சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. அவ்வாறு நடந்தால் வாழ்க்கையில் பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடலாம். |
பரிஸ்தமிழில் விளம்பரம் !
தினமும் 18,500ற்கு மேற்பட்ட வாசகர் கொண்ட Paristamil.comல் விளம்பரம் செய்து அதிக பயன் பெறுங்கள்.



திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்








Ajouter
Annuaire