Paristamil Navigation Paristamil advert login

குழந்தைகள் பெயர்

Fille

Garçon

Name Numerology No Total
D யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?   - வாசிக்க
'D' என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள்

'D' என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் ராஜதந்திரத்துடன் செயல்படுவார்கள். ஆற்றல்மிக்க பேச்சால் பல தரப்பு மக்களின் நட்பைப் பெறுவார்கள். அதே நேரத்தில், எதிர்ப்பையும் அதிகமாகச் சந்திப்பார்கள். குடல், கண் தொடர்பான நோய்கள், மூட்டுவலி மற்றும் பித்தம் போன்ற உடல்நலப் பிரச்சினைகளால் அவ்வப்போது அவதிப்படக்கூடும்.

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், நல்ல இல்லற வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள். அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை வைத்து அதில் வெற்றியும் காண்பார்கள். கடவுள் நம்பிக்கை அதிகமாக இருக்கும். துன்பத்திலும் மகிழ்ச்சியாக இருப்பது போல வெளிப்படுத்துவார்கள். சுவையான உணவுகளை மிகவும் விரும்புவார்கள். கார உணவுகளும் அசைவ உணவுகளும் இவர்களுக்கு பிடிக்கும்.

சிலர் சமூக சேவை நிறுவனங்களை நடத்தி புகழும் செல்வமும் பெறுவார்கள். அரசின் கொள்கைகள் மக்களுக்கு பாதகமாக இருந்தால், அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையில் மாற்ற வேண்டும் என்று போராடுவார்கள்.

சோர்வடைந்த நண்பர்களையும் உறவினர்களையும் ஊக்குவித்து உற்சாகப்படுத்துவார்கள். தாங்கள் தவறு செய்திருந்தால், வயதில் தம்மைவிட இளையவர்களிடம்கூட மன்னிப்பு கேட்கத் தயங்கமாட்டார்கள்.

உடற்பயிற்சி, அழகுக்கலை, வாகன ஓட்டுதல் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள். பழமையான பொருட்களைச் சேகரிப்பதில் விருப்பம் அதிகம். நாட்டுப்பற்று மிகுந்தவர்கள். நல்ல வாசனைத் திரவியங்கள், அழகான ஆடைகள் ஆகியவற்றில் தனித்துவமான ரசனை கொண்டிருப்பார்கள்.

வாயால் பேசுவதில் திறமைசாலிகள் என்றாலும், அதே பேச்சே சில நேரங்களில் இவர்களுக்கு எதிரியாக மாறக்கூடும். இறைவன் தந்த வாழ்க்கை இன்பங்களை முழுமையாக அனுபவிக்க விரும்புவார்கள். முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை.

எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கும் திறன் இவர்களிடம் காணப்படும். கம்பீரமான குணம் கொண்டவர்கள். வீரமும் தைரியமும் நிறைந்தவர்கள். சில சமயங்களில் பிடிவாதம் அதிகமாக இருக்கும். தங்களுடைய கருத்தை இறுதிவரை நிலைநிறுத்த முயல்வார்கள். இதனால் தேவையற்ற பகைவர்களையும் உருவாக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

பல மொழிகளைக் கற்கவும் பேசவும் விருப்பம் உடையவர்கள். பயணம் செய்வதிலும் வெளிநாடுகளுக்குச் செல்வதிலும் ஆர்வம் அதிகம். பிறருக்கு உதவும் மனப்பான்மை இருந்தாலும், தங்களுக்கு உதவ யாரும் வருவதில்லை என்ற உணர்வு சில நேரங்களில் ஏற்படலாம்.

மந்திரம், தந்திரம் போன்ற மறைமுறை அறிவுகளில் ஆர்வம் இருக்கும். இவர்களின் செயல்களைப் புரிந்துகொள்வது மற்றவர்களுக்கு எளிதல்ல. நல்ல ஆலோசனைகளை வழங்கும் திறமை கொண்டவர்கள். தங்களது கருத்தை மிகவும் நயமாக மற்றவர்களிடம் எடுத்துரைப்பார்கள்.
பரிஸ்தமிழில் விளம்பரம் !

தினமும் 18,500ற்கு மேற்பட்ட வாசகர் கொண்ட Paristamil.comல் விளம்பரம் செய்து அதிக பயன் பெறுங்கள்.