குழந்தைகள் பெயர்
Fille
Garçon
| Name | Numerology No | Total |
E யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்? - வாசிக்க |
| தாராளமாக ஆலோசனைகளை வழங்கும் இயல்புடையவர்கள் இவர்கள். அதிக சுதந்திரத்தை விரும்புவார்கள். எதையும் உடனடியாகப் புரிந்துகொள்ளும் திறன் கொண்டவர்கள். எப்போதும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் செயல்படுவார்கள்.
தங்களைப் பற்றி பெருமையாக பேசுவதில்லை. அதே சமயம் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு மிக விரைவாக முன்னேறும் வழிகளைத் தேடுவார்கள். எந்த வேலையிலும் மிகுந்த கவனத்துடன் ஈடுபடுவார்கள். ஒரு காரியத்தைத் தொடங்கினால் அதை முழுமையாக்காமல் விடமாட்டார்கள். பிறர் கைவிட்ட பணிகளைக்கூட ஏற்று வெற்றிகரமாக முடிப்பார்கள். நஷ்டத்தில் இருக்கும் நிறுவனங்களைக்கூட மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் திறன் இவர்களிடம் இருக்கும். மற்றவர்களிடம் வேலை செய்வதைவிட, சொந்தமாக தொழில் செய்து வெற்றி பெற விரும்புவார்கள். இவர்களின் இனிமையான பேச்சு வாடிக்கையாளர்களை எளிதில் கவரும். புதுமையான யோசனைகளால் முன்னேற்றம் அடைவார்கள். சில தோல்விகள் வந்தாலும் மனம் தளராமல் மீண்டும் முயற்சி செய்து வெற்றி காண்பார்கள். இவர்கள் மனிதநேய உணர்வு கொண்டவர்கள். சமூக நலனில் அதிக அக்கறை செலுத்துவார்கள். எந்தத் துறையில் கவனம் செலுத்தினாலும் சிறந்த சாதனைகள் படைப்பார்கள். இவர்களின் திறமையை சரியானவர்கள் பயன்படுத்தினால் அது ஒரு பெரிய அதிர்ஷ்டமாகும். சோம்பேறித்தனத்தை வெறுப்பார்கள். பகல், இரவு பாராமல் உழைப்பார்கள். காதலில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். உலகின் எந்த மூலையிலும் சென்றாலும் புதிய நண்பர்களை உருவாக்கும் திறன் பெற்றவர்கள். மற்றவர்களை ஊக்குவித்து அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார்கள். இரகசியங்களை பாதுகாப்பதில் நம்பகத்தன்மை கொண்டவர்கள். நல்ல ஆலோசனைகளை வழங்கும் சிறந்த வழிகாட்டிகளாக இருப்பார்கள். வயிற்று தொடர்பான உடல்நலக் குறைகள் சில நேரங்களில் ஏற்படலாம். எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குவதால் உடலுக்கு போதிய ஓய்வு அளிப்பது அவசியம். இயற்கையாகவே அறிவாற்றல் மிக்கவர்கள். வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவதற்கான வாய்ப்பு அதிகம். "A" என்ற எழுத்துடன் இணையும் பெயர்கள் மிகவும் நல்ல பலன்களைத் தரும். பிறருக்கு உதவி செய்து, அவர்களிடமிருந்தும் உதவி பெறும் வாழ்க்கை அமையும். கலைத்துறையில் சாதிக்கும் திறன் கொண்டவர்கள். அறிவு, தியானம், யோகம் போன்றவற்றில் ஆர்வம் இருக்கும். புதிய புதிய திட்டங்களை மனதில் உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள். நண்பர்களுக்கு பல நன்மைகளைச் செய்வார்கள். தங்களது பண்பாலும் பேச்சுத் திறமையாலும் அனைவரையும் எளிதில் கவர்ந்து விடுவார்கள். |
பரிஸ்தமிழில் விளம்பரம் !
தினமும் 18,500ற்கு மேற்பட்ட வாசகர் கொண்ட Paristamil.comல் விளம்பரம் செய்து அதிக பயன் பெறுங்கள்.



திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்








Ajouter
Annuaire