குழந்தைகள் பெயர்
Fille
Garçon
| Name | Numerology No | Total |
F யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்? - வாசிக்க |
| F எழுத்தில் பெயர் தொடங்குபவர்களின் குணநலன்கள்
குழந்தை மனதுடையவர்கள் F எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள். எதிலும் துணிச்சலுடன் செயல்பட்டு தாங்கள் தொடங்கிய காரியங்களை வெற்றிகரமாக முடிப்பார்கள். வெளிப்படையாக கடினமானவர்களாகத் தோன்றினாலும், உள்ளத்தில் மிகுந்த அன்பும் மென்மையும் கொண்டவர்கள். இவர்களின் நிர்வாகத் திறமை அனைவரையும் ஆச்சரியப்படுத்தும். ஒரே நேரத்தில் பல நிறுவனங்களிலிருந்து வேலை வாய்ப்புகள் வரக்கூடும். நட்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பவர்கள். நண்பர்களின் கருத்துகளையும் மதித்து ஏற்றுக்கொண்டால் வாழ்க்கையில் இன்னும் உயர்ந்த நிலையை அடையலாம். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகம் இருக்கும். பலர் சிறந்த அறிஞர்களாக உயரக்கூடிய திறமை பெற்றிருப்பார்கள். புகழைப் விரும்புவார்கள். தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக இருப்பதால் சிலர் இவர்களை ஆணவம் கொண்டவர்கள் என்று நினைக்கலாம். ஆனால் அவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் தங்கள் இலக்கை நோக்கி தொடர்ந்து பயணிப்பார்கள். செய்த நன்றியை மறக்கமாட்டார்கள். உடல் மற்றும் மன வலிமை அதிகம். நோய்கள் எளிதில் அணுகாது. வந்தாலும் அதை எதிர்கொள்ளும் மன உறுதி அதிகம். எப்போதும் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். மனச்சோர்வில் இருப்பவர்களுக்கு உற்சாகம் அளிப்பார்கள். பேச்சாற்றலால் பிறரை எளிதில் கவரக்கூடியவர்கள். நாட்டுப்பற்று, எளிமை போன்ற உயர்ந்த மதிப்புகளைப் பேசுவார்கள். ஆனால் பிடிவாதம் காரணமாக சில நல்ல நண்பர்களை இழக்க நேரிடலாம். பிறருக்கு ஆலோசனை வழங்க விரும்புவார்கள்; ஆனால் பிறர் கூறும் ஆலோசனையை ஏற்க தயங்குவார்கள். நல்ல அறிவுரைகளை ஏற்றுக்கொண்டால் மிகுந்த நன்மைகள் கிடைக்கும். அதிகமாகப் பேசும் பழக்கம் சில சமயங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். இவர்களின் செயல்பாடுகள் இயற்கையின் வேகத்தைப் போன்றதாக இருக்கும். இவர்களை எளிதில் கட்டுப்படுத்த முடியாது. சில நேரங்களில் நண்பர்களும் உறவினர்களும் இவர்களை சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம். இவர்கள் சுதந்திரமான மனப்பான்மையை விரும்புவார்கள். பெருந்தன்மை, இரக்கம், மனிதநேயம் ஆகியவை இயல்பாகவே இவர்களிடம் இருக்கும். அறிவியல் சிந்தனை கொண்டவர்களாகவும், பிறருக்கு வழிகாட்டியாகவும் இருப்பார்கள். தங்களைப் பற்றிப் பெருமைப்படுத்தினாலும், பிறரின் சிறப்புகளையும் பாராட்டுவார்கள். இரும்பு போன்ற உறுதியான மனம் கொண்டவர்கள். பொறுமையுடனும் நிதானத்துடனும் செயல்பட்டு வெற்றியை அடைவார்கள். பெயர் A, I, J, Q போன்ற எழுத்துகளில் தொடங்குபவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது சற்று கவனமாக இருப்பது நல்லது. |
பரிஸ்தமிழில் விளம்பரம் !
தினமும் 18,500ற்கு மேற்பட்ட வாசகர் கொண்ட Paristamil.comல் விளம்பரம் செய்து அதிக பயன் பெறுங்கள்.



திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்








Ajouter
Annuaire