Paristamil Navigation Paristamil advert login

குழந்தைகள் பெயர்

Fille

Garçon

Name Numerology No Total
G யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?   - வாசிக்க
G எழுத்தில் பெயர் தொடங்குபவர்களின் குணநலன்கள்

G என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் புத்திசாலிகள். ஊக்கம், கடின உழைப்பு, ஒழுக்கம், கட்டுப்பாடு, அடக்கம், நேர்மை, நியாயம், சிக்கனம், பிறருக்கு மரியாதை, தனக்கும் மரியாதை கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் ஆகியவற்றைக் கொண்டவர்கள். ஆடம்பரத்தை விரும்பமாட்டார்கள்.

தர்ம காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பார்கள். தங்களது சொத்துக்களை பிறருக்கு உதவியாக வழங்கும்போது அளவோடு செயல்படுவார்கள். ஆனால் மற்றவர்களையும் தர்மம் செய்ய ஊக்குவிப்பார்கள்.

ஒரு வேலையைத் தொடங்கினால் அதை முடிக்காமல் விடமாட்டார்கள். தொடர்ந்து முயற்சி செய்வார்கள். இவர்களின் நல்ல குணங்கள் காரணமாக உயர்ந்த பதவிகள் தாமாகவே தேடி வரும். எந்தப் பதவியில் இருந்தாலும் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழில் தர்மத்தை எப்போதும் காப்பார்கள். குடும்ப விஷயங்களை வெளியே கூறமாட்டார்கள். நாட்டின் நலனில் அதிக அக்கறை கொண்டிருப்பார்கள். இளமையிலேயே புத்திசாலி என்ற பெயரைப் பெறுவார்கள். கல்வியிலும் சிறந்து விளங்குவார்கள்.

இவர்களின் கண்களில் கவர்ச்சி இருக்கும். புதிய சிந்தனைகளையும் கண்டுபிடிப்புகளையும் உலகிற்கு வழங்குவார்கள். வரவிருக்கும் சில நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்கும் திறன் இவர்களுக்கு இருக்கும். திட்டமிட்டு செயல்பட்டு நல்ல பெயர் பெறுவார்கள்.

உணவு பழக்கத்தில் கட்டுப்பாடு இருக்கும். இனிப்புகள், பருப்பு வகைகள், நெய் சேர்த்த சைவ உணவுகளை விரும்புவார்கள். சில நேரங்களில் நடக்காத காரியங்களிலும் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை வைப்பது இவர்களின் பலவீனமாக இருக்கும். இதனால் சில தோல்விகளை சந்திக்க நேரிடலாம். எளிதில் யாரையும் நம்பமாட்டார்கள். வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், மன்னர்கள் மற்றும் மகான்கள் குறித்து ஆர்வம் அதிகம்.

உயர்ந்த தோற்றம், அழகான முகம், நிமிர்ந்த நடை ஆகியவற்றால் அனைவரையும் கவர்வார்கள். பணக்காரராக இருப்பார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவார்கள். தங்களது மதிப்பை குறைக்கும் செயல்களில் ஈடுபடமாட்டார்கள். தங்களது பேச்சால் கவர முடியாதவர்களிடம் மீண்டும் முயற்சி செய்யமாட்டார்கள்.

வியாபாரம் செய்தால் நியாயமான லாபத்தை மட்டுமே விரும்புவார்கள். நிலம் மற்றும் அசையா சொத்துகள் இவர்களுக்கு அதிக செல்வத்தைத் தரும்.

கல்வித்துறை, ஆன்மிகத் துறை, வங்கித்துறை போன்றவற்றில் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புகழும் பொருளாதார முன்னேற்றமும் அடைவார்கள். உயர்ந்த இலட்சியங்களுடன் வாழ்பவர்கள். F, Q, P என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்களுடனும், எண் 6 தொடர்புடைய நாட்களிலும் சற்று கவனமாக இருப்பது நல்லது.
பரிஸ்தமிழில் விளம்பரம் !

தினமும் 18,500ற்கு மேற்பட்ட வாசகர் கொண்ட Paristamil.comல் விளம்பரம் செய்து அதிக பயன் பெறுங்கள்.