Paristamil Navigation Paristamil advert login

குழந்தைகள் பெயர்

Fille

Garçon

Name Numerology No Total
H யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?   - வாசிக்க
H என்றாலே ஹேப்பி தான்!

H என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்குகிறதா? அப்படியானால் நீங்கள் வேகமாக செயல்பட்டு காரியங்களை விரைவாக முடிப்பவராக இருப்பீர்கள். பேச்சாலும் செயலாலும் மற்றவர்களின் கவனத்தை எளிதில் ஈர்ப்பீர்கள். கவலையான சூழல்களிலும் மகிழ்ச்சியைத் தக்கவைத்துக் கொள்வீர்கள். உங்களிடம் சூரியனைப் போன்ற ஆற்றல் இருப்பதால் இத்தகைய தன்மைகள் வெளிப்படும். ஆனால் சில நேரங்களில் அவசரப்படுவதால் நிதானம் குறையலாம். எனவே சுயகட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்வது நல்லது.

உங்களுக்கு ஒரு நல்ல ஆலோசகர் இருந்தால் வாழ்க்கையில் மேலும் உயர முடியும். நகைச்சுவை உணர்வு மிகுந்தவர்கள். கேலி, கிண்டல், நகைச்சுவை மூலம் மற்றவர்களை மகிழ்விப்பீர்கள். ஆடை அணிவதில் தனித்துவமான ரசனை இருக்கும். எந்த வகை உணவையும் விரும்பிச் சாப்பிடுவீர்கள். வாசனைத் திரவியங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களில் அதிக விருப்பம் இருக்கும்.

எந்த காரியத்திலும் வெற்றி கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே அதில் ஈடுபடுவீர்கள். அன்பாகப் பேசி பிறரிடம் வேலை வாங்குவதில் உங்களுக்கு இணை யாரும் இல்லை. எந்தச் செயலையும் மிகுந்த கவனத்துடன் செய்வீர்கள். அழகான இடங்கள், அலங்கரிக்கப்பட்ட வீடுகள், இயற்கைக் காட்சிகள் போன்றவற்றை மிகவும் விரும்புவீர்கள்.

சிலர் காதல் விஷயங்களில் உணர்ச்சிவசப்படக்கூடும். காரமான உணவுகள் மற்றும் மாமிச உணவுகளை விரும்புவார்கள். இதனால் வயிற்று சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சாத்தியமில்லாத காரியங்களைக் கூட தன்னம்பிக்கையுடனும் உறுதியான பேச்சாலும் செய்து முடிப்பார்கள்.

அனாவசிய செலவுகள் செய்வதில் கவனம் தேவை. "வந்தால் வரட்டும், போனால் போகட்டும்" என்ற மனநிலை சில நேரங்களில் பொருளாதார சிக்கலை ஏற்படுத்தலாம். திட்டமிட்டு செயல்பட்டால் எதிர்காலம் வளமாக இருக்கும்.

வெற்றிகளை குவிப்பது இவர்களின் இயல்பு. மந்திரம், தந்திரம், ரகசிய அறிவு போன்றவற்றில் ஆர்வம் இருக்கும். பொதுநல சேவைகளில் ஈடுபட்டு, நலிந்த அமைப்புகளுக்குப் புத்துயிர் அளிக்கும் திறன் பெற்றவர்கள். தேசப்பற்றுடன் சமூக நலனுக்காக உழைப்பார்கள்.

எப்போதும் புதிய யோசனைகளையும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் வழங்குவார்கள். அதனால் இவர்களைச் சுற்றி எப்போதும் நண்பர்கள் இருப்பார்கள். புதிய இடத்திற்குச் சென்றாலும் அச்சமோ தயக்கமோ இருக்காது. குறுகிய காலத்திலேயே அனைவரின் மனதையும் கவர்ந்து அந்த இடத்தில் முக்கியமான நபராக மாறிவிடுவார்கள்.

மற்றவர்களைத் தன் வசப்படுத்தும் கவர்ச்சி இவர்களிடம் இருக்கும். வாழ்க்கையின் இன்பங்களை ரசிப்பவர்கள். உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றினால் நீண்ட ஆயுளுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ முடியும்.
பரிஸ்தமிழில் விளம்பரம் !

தினமும் 18,500ற்கு மேற்பட்ட வாசகர் கொண்ட Paristamil.comல் விளம்பரம் செய்து அதிக பயன் பெறுங்கள்.