குழந்தைகள் பெயர்
Fille
Garçon
| Name | Numerology No | Total |
K யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்? - வாசிக்க |
| K – கடவுள் பற்றுமிக்க எழுத்து
K என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் அன்பும், பணிவும், கனிவும் நிறைந்தவர்கள். அனைவரையும் மதிக்கும் குணமும், இறைநம்பிக்கையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் இனிய முகபாவனையும், கவர்ச்சியான பார்வையும் பிறரை எளிதில் ஈர்க்கும். சூரியனின் சக்தி இந்த எழுத்தில் பிரதிபலிப்பதால், மனிதநேயம், மாயசக்தி, மனவசியம், கற்பனை வளம், கதை மற்றும் கட்டுரை எழுதும் திறன் போன்ற சிறப்புகள் இவர்களிடம் காணப்படும். பிறரின் பாராட்டுகளையும் மரியாதையையும் எளிதில் பெறுவார்கள். மனதில் தோன்றிய எண்ணங்களை செயலாக்கும் திறன் இவர்களுக்கு உண்டு. கருணை மிகுந்த இதயமுடையவர்கள். பலர் இவர்களை நம்பி உதவி கேட்பார்கள். ஆனால் இவர்கள் அனைவரையும் எளிதில் நம்பமாட்டார்கள். தங்களின் திறமையை சில நேரங்களில் தாங்களே உணராமல் இருப்பார்கள். எந்த விஷயத்தையும் சுவாரஸ்யமாகப் பேசும் திறன் இவர்களுக்கு உண்டு. மற்றவர்களுக்கு அறிவுரை வழங்குவதிலும் சிறந்தவர்கள். ஆனால் பிறர் வழங்கும் ஆலோசனைகளை எப்போதும் ஏற்றுக்கொள்ள விரும்பமாட்டார்கள். வரவேற்பாளர், ஆசிரியர், எழுத்தாளர், ஆன்மீகப் பேச்சாளர், கதை எழுத்தாளர் போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள். அறிவையும் கல்வியையும் மிகவும் விரும்புவார்கள். பெண்களிடம் நல்ல வரவேற்பைப் பெறுவார்கள். தாங்களாக காதலைத் தொடங்குவதில்லை; ஆனால் பலர் இவர்களை விரும்புவார்கள். காரணம் இவர்களின் அமைதியான முகமும் இனிமையான குணமும் ஆகும். கலைகளில் ஆர்வம் அதிகம். ஆடை அணிவதில் அழகிய ரசனை கொண்டவர்கள். சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் திறன் இவர்களுக்கு உண்டு. சிறிய விஷயங்களையும் பெரிதாக எடுத்துக்கொள்ளும் பழக்கம் இருப்பதால் சில நேரங்களில் மனஅழுத்தம் ஏற்படலாம். தெய்வீக சிந்தனை, ஞானம், தத்துவம் ஆகியவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். வயிறு மற்றும் நீர்ச்சத்து தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் வரக்கூடும். ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்றுவது நல்லது. எழுத்து, விவசாயம், பெண்கள் தொடர்பான தொழில்கள், நீர் சார்ந்த வியாபாரங்கள், கடல் வணிகம், நகை வியாபாரம், துணி வியாபாரம், மருந்து விற்பனை, திரைப்படம், ஜோதிடம், சாஸ்திரம், எண் கணிதம் போன்ற துறைகள் இவர்களுக்கு சிறந்த முன்னேற்றத்தைத் தரும். சண்டைகளை விரும்பமாட்டார்கள். ஆனால் அவசியமான சமயங்களில் தங்களுக்காக தைரியமாக நிற்பார்கள். எந்தத் தீய பழக்கத்திற்கும் அடிமையாகாமல் இருந்தால் வாழ்க்கையில் மிகுந்த முன்னேற்றத்தை அடைவார்கள். |
பரிஸ்தமிழில் விளம்பரம் !
தினமும் 18,500ற்கு மேற்பட்ட வாசகர் கொண்ட Paristamil.comல் விளம்பரம் செய்து அதிக பயன் பெறுங்கள்.



திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்








Ajouter
Annuaire