Paristamil Navigation Paristamil advert login

குழந்தைகள் பெயர்

Fille

Garçon

Name Numerology No Total
L யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?   - வாசிக்க
L இல் பெயர் தொடங்கினால் – "லக்கி" தான்

L என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நீதி, நேர்மை, நியாயம் ஆகியவற்றை வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்டிருப்பார்கள். சுறுசுறுப்பு, புத்திக்கூர்மை, தன்னம்பிக்கை மற்றும் மனதில் இருப்பதை தயக்கமின்றி வெளிப்படுத்தும் திறன் இவர்களுடைய முக்கிய பண்புகளாகும்.

இவர்கள் எங்கு சென்றாலும் மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். உண்மையைப் பேணுபவர்கள்; உள்ளொன்று வைத்து புறமொன்று பேச மாட்டார்கள். இறைவன் மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருப்பார்கள். ஆனால் மூடநம்பிக்கைகளைத் தவிர்ப்பது இவர்களுக்கு நல்லது.

புராணங்கள், இதிகாசங்கள், உபநிஷத்துகள், சாஸ்திரங்கள் போன்றவற்றில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். தங்களது கருத்துக்களை தைரியமாக வெளிப்படுத்துவார்கள். நாட்டுப்பற்று மிகுந்தவர்கள்; கடின உழைப்பும், நாணயமும், பிறரை மதிக்கும் பண்பும் இவர்களிடம் இருக்கும்.

சட்டம், ஒழுக்கம், சமூக நலன் போன்ற விஷயங்களில் சிறந்த ஆலோசனைகளை வழங்குவார்கள். பொதுமக்கள் இவர்களை எளிதில் நம்புவார்கள். ஆச்சாரங்களையும் அனுஷ்டானங்களையும் மதித்து நடப்பார்கள். உயர்ந்த பதவிகள் இவர்களைத் தேடி வரும்.

ஆசிரியர்களை மிகவும் மதிப்பார்கள். சுயமரியாதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். தங்களது எண்ணப்படி செயல்பட விரும்புவதால் சில நேரங்களில் நட்புகளில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

பேச்சாற்றல் மிகுந்தவர்கள். அதர்மத்தை வெறுப்பவர்கள். கல்வி, அறிவு, தர்மம் ஆகியவற்றில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பார்கள். சிறந்த நடிகர், அரசியல் தலைவர், பேச்சாளர், நிர்வாகி போன்ற நிலைகளில் உயர வாய்ப்பு உண்டு.

கருணை, நீதி, கணக்குத் திறன் ஆகியவை இவர்களின் பலம். வெளியூர் பயணங்கள் அதிகமாக இருக்கும். பிறருக்கு உதவ விரும்புவார்கள். இவர்களின் நல்ல பண்புகள் காரணமாக பலர் இவர்களை முன்மாதிரியாகக் கருதுவார்கள்.

கல்வி, ஆன்மீகம், மருத்துவம், திரைப்படம், கல்வி நிறுவனங்கள், சமூக சேவை போன்ற துறைகளில் சிறந்த முன்னேற்றம் பெறுவார்கள்.

உடல்நலத்தில் ஒவ்வாமை (Allergy) போன்ற பிரச்சினைகள் வரக்கூடும். தங்களது அறிவே இவர்களின் மிகப்பெரிய சொத்து. வாழ்க்கையில் சிலருடன் மிகுந்த கவனத்துடன் பழகுவது நல்லது.

9 மற்றும் 1 ஆகிய எண்களைக் கொண்டவர்களுடனும், C, G, L, S, A, I, J, Q போன்ற எழுத்துகளில் பெயர் தொடங்குபவர்களுடனும் நல்ல நட்பு ஏற்படும். உண்மையையும் தர்மத்தையும் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் பெரிய வெற்றிகளைப் பெறுவார்கள்.
பரிஸ்தமிழில் விளம்பரம் !

தினமும் 18,500ற்கு மேற்பட்ட வாசகர் கொண்ட Paristamil.comல் விளம்பரம் செய்து அதிக பயன் பெறுங்கள்.