குழந்தைகள் பெயர்
Fille
Garçon
| Name | Numerology No | Total |
O யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்? - வாசிக்க |
| O என்ற எழுத்தில் பெயர் தொடங்குகிறதா? நாம் அனுபவிக்கும் அனைத்துப் பொருட்களும் இந்த பூமியிலிருந்தே தோன்றியவை. சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்து கிரகங்களும் உருண்டை வடிவிலேயே உள்ளன. வேறு கிரகத்திலிருந்து எந்தப் பொருள் வந்தாலும், அடுத்த கிரகம் அதை ஏற்றுக்கொள்ளாது. இது இயற்கையின் நியதி. தன்னுடைய வேலை உண்டு, யாருக்கும் எந்தத் தொந்தரவும் செய்யமாட்டார்கள்; பிறரின் தொந்தரவையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 'O' என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் மற்றவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆன்மீக சிந்தனை கொண்ட இவர்கள் சிறந்த ஆராய்ச்சியாளர்களாக இருப்பார்கள். மந்திரம், தந்திரம், சூட்சும சக்திகள், மனவசியம் போன்ற விஷயங்களில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பார்கள். சாஸ்திரம் மற்றும் பாரம்பரிய விஷயங்களில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர்கள். நீதியை நிலைநாட்டுவதில் முனைப்புடன் செயல்படுவார்கள். உலகில் நடைபெறும் அநீதிகளை நினைத்து மனம் வருந்துவார்கள். இயற்கை சூழலில் வாழ விரும்புவார்கள். இருப்பினும், சிலர் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகும் வாய்ப்பும் உண்டு. 50 வயதிற்குப் பிறகு உலக வாழ்க்கையின் நிலையின்மையை உணர்ந்து, ஞான மார்க்கத்தை நோக்கி மனம் செல்லக்கூடும். கடந்த காலம், எதிர்காலம், பிறவிகள், மனித மனம், பிற கிரகங்களில் வாழ்க்கை போன்ற ஆழமான விஷயங்களை ஆராய்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். எளிமையான ஆடைகளை அணிந்தாலும், அவர்களிடம் தனித்துவமான கம்பீரம் காணப்படும். அவர்களின் கண்களில் ஒரு ஆன்மீக ஒளி இருக்கும். மத சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் அதிக ஈடுபாடு காணப்படும். உயிர்ப்பலி போன்ற செயல்களை விரும்பமாட்டார்கள். வெளிநாடுகளுக்குச் சென்று வாழவும், வேலை செய்யவும் வாய்ப்புகள் கிடைக்கலாம். அமைதியானவர்களாகத் தோன்றினாலும், சில நேரங்களில் தங்களையும் பிறரையும் குழப்பத்தில் ஆழ்த்தும் குணம் இவர்களிடம் இருக்கும். தத்துவ சிந்தனை அதிகம் இருக்கும். புலனடக்கம் கொண்டவர்களாக இருந்தாலும், காதல் தோல்விகளை சந்திக்கும் வாய்ப்பும் உள்ளது. கலைத் துறையில் மிகுந்த திறமை கொண்டவர்கள். இவர்களின் பேச்சைக் கேட்க மக்கள் விரும்புவார்கள். கற்பனை வளம் அதிகமாக இருக்கும். மனிதகுல நலனுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கத் தயங்கமாட்டார்கள். அதனால் உலகப் புகழ் பெறும் வாய்ப்பும் உண்டு. இருப்பினும், மக்கள் எளிதில் நம்புவதால், தேவையற்ற கருத்துகளை பகிராமல் இருப்பது நல்லது. இவர்களின் பல எண்ணங்கள் பின்னாளில் உண்மையாகும். இவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி சற்று குறைவாக இருக்கலாம். அதனால் சுத்தமான சூழலில் வாழ்வதும், சத்தான உணவை உட்கொள்வதும் அவசியம். பயணக் கட்டுரைகள் எழுதுவதில் திறமை பெற்றவர்களாக இருப்பார்கள். பொருளாதார முன்னேற்றம் தாமதமாக வந்தாலும், வந்த பிறகு தொடர்ந்து வளரும். மன உறுதி இருந்தால் வாழ்க்கையில் பெரிய சாதனைகள் செய்ய முடியும். R, K, B என்ற எழுத்துகளில் பெயர் தொடங்குபவர்கள் இவர்களுக்கு நல்ல நண்பர்களாகவும், உதவியாளர்களாகவும் இருப்பார்கள். சினிமா, கவிதை, புத்தக எழுத்து, விவசாயம், பால் பண்ணை, காகிதத் தொழில், மின்னணுவியல், வானியல் போன்ற பல துறைகளில் சிறந்து விளங்குவார்கள். நட்பை மதிப்பார்கள். பிறர் கூறும் நல்ல ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். தங்களுக்கு தொடர்பில்லாத விஷயங்களில் தலையிடமாட்டார்கள். திடீர் அதிர்ஷ்டத்தை விட கடின உழைப்பை நம்புவார்கள். அடிக்கடி வாகனங்களை மாற்ற விரும்புவார்கள். தலைவலி, தோல் நோய்கள், மூட்டு வலி, வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. உணவுக் கட்டுப்பாட்டையும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் கடைப்பிடித்தால் இவற்றைத் தவிர்க்கலாம். மதப்பற்று அதிகமாக இருந்தாலும், பிற மதத்தினரையும் மனிதநேயத்துடன் மதிப்பார்கள். குழப்பமான சூழ்நிலைகளுக்கு தெளிவான தீர்வுகளை வழங்குவார்கள். மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ பிறருக்கும் வழிகாட்டுவார்கள். 'O' என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் கூறும் கருத்துகள் பெரும்பாலும் நல்ல நோக்கத்துடனும், மக்களுக்கு பயனளிப்பவையாகவும் இருக்கும். |
பரிஸ்தமிழில் விளம்பரம் !
தினமும் 18,500ற்கு மேற்பட்ட வாசகர் கொண்ட Paristamil.comல் விளம்பரம் செய்து அதிக பயன் பெறுங்கள்.



திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்








Ajouter
Annuaire