குழந்தைகள் பெயர்
Fille
Garçon
| Name | Numerology No | Total |
R யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்? - வாசிக்க |
| R என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?
R என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் அன்பும், அறிவும், ஆற்றலும், இயல்புத்தன்மையும், ஈகை குணமும் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த எழுத்தில் சூரியக் கதிர்கள் படும் விதத்தால், கற்பனைத் திறன், தன்னம்பிக்கை, கனிவான பேச்சு, மற்றும் பிறரை தங்கள் செயல்களால் கவரும் திறன் ஆகியவை இவர்களிடம் இருக்கும். சமூக சேவைகளில் ஆர்வத்துடன் முன்வந்து செயல்படுவார்கள். கலைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். பெண்களுக்கு மரியாதை அளிப்பார்கள். குழந்தைகளிடம் அதிக பாசம் கொண்டிருப்பார்கள். நல்ல சிந்தனையுடைய இவர்கள், நீர் தொடர்பான சில உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்கக்கூடும். முக்கியமான முடிவுகளை உடனடியாக எடுக்காமல் சிந்தித்து முடிவு செய்வார்கள். புதியவர்களிடம் அன்பாக பழகி, அவர்களை குடும்பத்தினரைப் போலவே நடத்துவார்கள். இயற்கையை நேசிப்பவர்கள். பஞ்சபூதங்களுக்கு மரியாதை செலுத்துவார்கள். கலை, திரைப்படம், பத்திரிகை, புத்தக வெளியீடு, விவசாயம், அரசுப் பணி, ஆன்மீகம் போன்ற துறைகளில் முன்னேறுவார்கள். குடும்ப நிகழ்வுகளில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பார்கள். தங்களுடைய உணர்வுகளை உறவினர்களிடம் வெளிப்படுத்துவதில் சில நேரங்களில் தயக்கம் காட்டுவார்கள். கடின உழைப்பின் காரணமாக ஏற்படும் சோர்வை பேச்சிலும் செயலிலும் வெளிப்படுத்துவார்கள். பிறர் மனதை புரிந்து நடந்து கொள்வதால் பல நண்பர்களைப் பெறுவார்கள். தங்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை பலமுறை நிரூபிப்பார்கள். நண்பர்கள் இவர்களுக்கு உதவத் தயாராக இருப்பார்கள். சிலருக்கு அரசுப் பதவிகள் கிடைக்கும் வாய்ப்பும் உண்டு. நல்ல குணநலன்களால் நாட்டில் மதிப்பும் புகழும் பெறுவார்கள். பொருளாதார வளர்ச்சி நடுத்தர வயதில் அதிகரிக்கும். இவர்களிடம் ஆலோசனை கேட்க பலர் வருவார்கள். ஆனால், பிறர் கூறும் ஆலோசனைகளை தாங்களோ எளிதில் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆழ்ந்த சிந்தனை, தவம், தியானம், ஆன்மீகம், மருத்துவம், பிராணாயாமம் மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் போன்றவற்றில் ஆர்வம் இருக்கும். சிலர் அரசியலில் எதிர்பாராத வகையில் உயர்வு பெறலாம். இவர்களை நம்பியவர்களை ஒருபோதும் கைவிடமாட்டார்கள். சாதாரண விஷயங்களைக்கூட அதிகமாக யோசித்து தாமதப்படுத்தும் பழக்கம் இருக்கலாம். தங்கள் கற்பனையில் உருவாக்கிய பல எண்ணங்கள் பின்னர் நிஜமாகும் போது மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். A, C, I, T என்ற எழுத்துகளில் பெயர் தொடங்குபவர்கள் இவர்களுக்கு நல்ல துணையாக இருப்பார்கள். இனிமையான பேச்சு, நளினமான நடை, இனிய குரல், மனிதநேயம் ஆகியவற்றால் எப்போதும் பிறரின் அன்பைப் பெறுவார்கள். 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுடன் அல்லது அந்த எண்களுடன் தொடர்புடையவர்களுடன் பழகும்போது சற்று கவனமாக இருப்பது நல்லது. தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் பல பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். |
பரிஸ்தமிழில் விளம்பரம் !
தினமும் 18,500ற்கு மேற்பட்ட வாசகர் கொண்ட Paristamil.comல் விளம்பரம் செய்து அதிக பயன் பெறுங்கள்.



திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்








Ajouter
Annuaire