குழந்தைகள் பெயர்
Fille
Garçon
| Name | Numerology No | Total |
S யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்? - வாசிக்க |
| S என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?
S என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்சினைகளில் தலையிடாத தன்மை, நிதானம் மற்றும் நிலையான செயல்பாடு ஆகியவற்றைக் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த எழுத்தில் சூரியக் கதிர்கள் படும் விதத்தால், இவர்களை எளிதில் யாராலும் கட்டுப்படுத்த முடியாது. நேர்மை, நீதி, நியாயம் ஆகியவற்றை பிறரிடமும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் தங்களுக்கு வரும் போது சில நேரங்களில் விதிவிலக்கை விரும்புவார்கள். அடிக்கடி கோபம் வந்தாலும், தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் அன்புடனும் பாசத்துடனும் நடந்து கொள்வார்கள். இறைநம்பிக்கையும், வாக்குச் சுத்தமும் இவர்களின் முக்கியமான குணங்களாகும். வயதில் மூத்தவர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பார்கள். எங்கு சென்றாலும் தங்களுக்கென்று ஒரு தனி இடத்தை உருவாக்கிக் கொள்வார்கள். யானையைப் போன்ற உறுதியும், மலையைப் போன்ற நிலைத்தன்மையும் இவர்களின் தனிச்சிறப்பாகும். பூஜை, ஆசாரம், அனுஷ்டானங்கள் ஆகியவற்றில் அதிக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். அதே நேரத்தில் பணியிலும் மிகுந்த ஒழுக்கத்துடன் செயல்படுவார்கள். "செய்யும் தொழிலே தெய்வம்" என்ற கொள்கையை பின்பற்றுவார்கள். எதை எடுத்தாலும் முழுமையாக செய்து வெற்றி காண்பார்கள். புகழ்ச்சியை எளிதில் நம்புவதால் சிலர் இவர்களை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கலாம். மக்கள் சேவையில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். நாட்டுப்பற்றும் அதிகமாக இருக்கும். வாழ்க்கையில் படிப்படியாக உயர்வை அடைவார்கள். தங்களுக்கு தீங்கு விளைவிப்பவர்களை விரைவாக அடையாளம் காண்பார்கள். அதனால் எதிரிகள் இவர்களை எளிதில் வெல்ல முடியாது. தர்ம சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள். உணவுக் குறைபாடு இவர்களுக்கு ஏற்படாது. தோல் ஒவ்வாமை, இனிப்பு அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் நீர் தொடர்பான உடல்நலக் குறைகள் வர வாய்ப்பு உள்ளது. உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடித்தால் இவற்றைத் தவிர்க்கலாம். பல பொதுநல அமைப்புகளில் தலைமைப் பொறுப்புகளை வகிப்பார்கள். வெள்ளை நிற ஆடைகளை விரும்புவார்கள். சைவ உணவிற்கு முன்னுரிமை அளிப்பார்கள். நுணுக்கமாக சிந்தித்து செயல்படுவதால் பலர் இவர்களிடம் ஆலோசனை கேட்பார்கள். பொருளாதார குறைபாடு பெரும்பாலும் இருக்காது. பணம் எப்போதும் புழக்கத்தில் இருக்கும். பேச்சுத் திறனால் மக்களை ஈர்ப்பார்கள். ஆன்மீகத்திலும் சிறந்த சாதனைகள் புரிவார்கள். பொருளாதாரம், அரசாங்க நிர்வாகம், உணவுத் துறை, அறிவியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள். இயற்கையை நேசிப்பவர்கள்; இயற்கை சூழலில் வாழ விரும்புவார்கள். இவர்களின் தனித்துவமான குணங்களால் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். |
பரிஸ்தமிழில் விளம்பரம் !
தினமும் 18,500ற்கு மேற்பட்ட வாசகர் கொண்ட Paristamil.comல் விளம்பரம் செய்து அதிக பயன் பெறுங்கள்.



திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்








Ajouter
Annuaire