குழந்தைகள் பெயர்
Fille
Garçon
| Name | Numerology No | Total |
T யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்? - வாசிக்க |
| T என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?
T என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் தாங்கள் கூறுவதே சரி என்று நம்புபவர்களாக இருப்பார்கள். பிறர் தங்களிடம் ஆலோசனை கேட்பதை விரும்புவார்கள். அதே நேரத்தில், மற்றவர்களிடம் நல்ல பெயர் பெற அனைவரிடமும் ஆலோசனை கேட்டுப் பிறகே செயல்பட வேண்டும் என்று கூறுவார்கள். இந்த எழுத்தின் அமைப்பினால், எந்த விஷயத்திலும் உறுதியான முடிவை உடனடியாக எடுக்க சற்று சிரமப்படுவார்கள். வெளிப்படையாகவும் நேரடியாகவும் பேசுவார்கள். சமுதாயத்தின் மீதும் இயற்கையின் மீதும் அளவில்லாத பற்று கொண்டிருப்பார்கள். புதிய விஷயங்களை மக்களிடம் பகிர்ந்து பரப்ப விரும்புவார்கள். வெளியூர் சென்று வந்தால், அங்குள்ள அனுபவங்களையும் தகவல்களையும் விரிவாக மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். சுதந்திரமாக வாழ விரும்புவார்கள். யாராக இருந்தாலும் தாமாக முன்வந்து உதவி செய்து நல்ல பெயர் பெறுவார்கள். முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உதவியும் செய்வார்கள். அரசாங்கத்திற்கே ஆலோசனை வழங்கும் அளவுக்கு அறிவாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். வரலாறு மற்றும் பழமையான விஷயங்களை அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் இருக்கும். தொடர்ந்து கேள்விகள் கேட்டு ஆராயும் குணம் இவர்களிடம் இருக்கும். சிறுவயதில் இது அதிகமாகத் தோன்றினாலும், பின்னர் அதுவே அவர்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் காரணமாக அமையும். ஆய்வு, ஆராய்ச்சி போன்றவற்றில் தனிப்பட்ட விருப்பம் கொண்டிருப்பார்கள். திரைப்படம், அரசியல், உயர்ந்த அரசுப் பதவிகள், இரும்புத் தொழில், கிரானைட், இரசாயனத் தொழில், வழக்கறிஞர் தொழில், வானவியல் மற்றும் கார் தொழில் போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள். நண்பர்கள் சில நேரங்களில் இவர்களின் அதிக உற்சாகத்தால் விலகிச் செல்லலாம். ஆனால், அவர்கள் நண்பர்களை மிகவும் அன்புடன் நடத்துவார்கள். நண்பர்களுக்காக தாராளமாக செலவு செய்வார்கள். விளையாட்டுத் துறையில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள். காரமான மற்றும் பொரித்த உணவுகளை விரும்புவார்கள். அழகுசாதனப் பொருட்களிலும் ஆர்வம் இருக்கும். எப்போதும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருப்பார்கள். சமூக சேவைக்காக தங்கள் குடும்பத்தையே மறந்து செயல்படும் அளவிற்கு அர்ப்பணிப்பு கொண்டிருப்பார்கள். யாராவது உதவி செய்தால், அதற்கு பல மடங்கு திருப்பிச் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். தற்பெருமையுடன் அல்லது தான்தோன்றித்தனமாக நடப்பவர்களை விரும்பமாட்டார்கள். "உங்களால் முடியாதது எதுவுமில்லை" என்று புகழ்ந்தால், அந்த பாராட்டில் மகிழ்ந்து மற்றவர்களுக்காக எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள். நாட்டுப்பற்று மிகுந்தவர்களாக இருப்பார்கள். சமுதாயத்திற்கு பல நன்மைகளைச் செய்வார்கள். சற்று பிடிவாத குணம் இருக்கும். ஆனால், தேவையான இடத்தில் விட்டுக்கொடுத்து நடந்தால், தொடர்ந்து வெற்றிகளைப் பெறுவார்கள். |
பரிஸ்தமிழில் விளம்பரம் !
தினமும் 18,500ற்கு மேற்பட்ட வாசகர் கொண்ட Paristamil.comல் விளம்பரம் செய்து அதிக பயன் பெறுங்கள்.



திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்








Ajouter
Annuaire