ரவா பொங்கல்!
25 சித்திரை 2025 வெள்ளி 15:11 | பார்வைகள் : 3915
ரவா வைத்து வழக்கமாக உப்புமா செய்வது உண்டு. பெரும்பாலும் உப்புமா என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு சலிப்பு வந்துவிடும். எனவே ரவா வைத்து வழக்கமான உப்புமா செய்யாமல் இந்த ரவா பொங்கல் செய்து பாருங்க அனைவருமே விரும்பி சாப்பிடுவாங்க. ரவா பொங்கல் செய்ய தேவையான பொருட்கள் செய்முறை விளக்கத்தை இங்கு பார்க்கலாம்.
ரவா பொங்கல் செய்ய தேவையான தேவையான பொருள்கள்: மெல்லிய ரவை - ஒரு கப், பாசிப்பருப்பு - 1/3 கப், பால் - ஒரு கப், தண்ணீர் 2 கப், மிளகு - 2 தேக்கரண்டி,சீரகம் - 1/2 தேக்கரண்டி, மிகப் பொடியாக நறுக்கிய இஞ்சி - 1/4 தேக்கரண்டி, கறிவேப்பிலை - 2 கொத்து, தேங்காய் துருவல் - 1/4 கப்,முந்திரி -7, நெய் - 2 மேசைக்கரண்டி,உப்பு -தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் பாசிபருப்பை போட்டு லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.வறுத்த பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பாலையும் தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விடவும்.
மற்றொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு, சீரகம் போட்டு பொரிய விடவும். மிளகு, சீரகம் பொரிந்ததும் முந்திரி, கறிவேப்பிலை, இஞ்சி, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் அதனுடன் ரவையை சேர்த்து நன்கு வதக்கவும். ரவை லேசாக நிறம் மாறியதும் உப்பு, வேக வைத்து எடுத்த பருப்பு, கொதிக்கும் தண்ணீர் சேர்த்து கைவிடாமல் கிளற வேண்டும். நன்கு வெந்ததும் இறக்கினால் சுவையான ரவா பொங்கல் ரெடி.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire