இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் - மன்னிப்பு கேட்ட அணித்தலைவர் தசுன் ஷானகா
26 மாசி 2026 வியாழன் 14:27 | பார்வைகள் : 2150
நியூஸிலாந்திடம் படுதோல்வியடைந்ததற்கு இலங்கையின் அணித்தலைவர் தசுன் ஷானகா மன்னிப்பு கேட்டுள்ளார்.
2026 டி20 உலகக்கிண்ணத்தின் சூப்பர் 8 சுற்றுப் போட்டியில், இலங்கை அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்திடம் படுதோல்வியடைந்தது.
அதனைத் தொடர்ந்து இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானகா, மீண்டும் ஒருமுறை தோல்வியடைந்ததற்காக தனது நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
மேலும் அவர் இலங்கை அரசுக்கு வேண்டுகோள் ஒன்றையும் வைத்துள்ளார். இலங்கை அணி தோல்வியடைந்ததற்கு உடற்தகுதி மற்றும் ஃபார்ம் மட்டும் முக்கிய காரணமல்ல என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் அவர், "2026 டி20 உலகக்கிண்ணத்தில் இருந்து அணி வெளியேற்றப்பட்டதற்கு வெளியே உருவாக்கப்பட்ட எதிர்மறை சூழல்தான் காரணம். வீரர்களை விமர்சனங்களில் இருந்து இலங்கை அரசு பாதுகாக்க வேண்டும்" என கூறியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire