ரூ.50 லட்சம் அபராதமா? பலிகடா ஆக்குவதை நிறுத்துங்கள் - கொந்தளித்த ஆமிர், அக்தர்
4 பங்குனி 2026 புதன் 11:58 | பார்வைகள் : 2177
2026 டி20 உலகக்கிண்ணத்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்ததற்கு, ஷோயப் அக்தர் மற்றும் முகமது ஆமிர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் டி20 உலகக்கிண்ணத்தில் ஏமாற்றம் அளித்த வீரர்களுக்கு தலா ரூ.50 லட்சம் அபராதம் விதித்தது.
பிசிபி (PCB) இந்த முடிவை முன்னாள் வீரர்களான ஷோயப் அக்தர் (Shoaib Akhtar), மொஹம்மமது ஆமிர் (Mohammad Amir) கண்டித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆமிர் கூறுகையில், "PCB தலைமையை விமர்சித்து தேர்வாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட முழு அமைப்பும் பொறுப்புக்கூற வேண்டும். அபராதங்கள்தான் தீர்வாக இருந்தால், தேர்வாளர்கள் முதல் நிர்வாகம் வரை அனைவருக்கும் அவற்றைப் பயன்படுத்துங்கள்.
வீரர்கள் ஒன்றும் துப்பாக்கி முனையில் கட்டாயப்படுத்தப்படவில்லை. தவறான சேர்க்கைகளுக்கு தேர்வாளர்களை பொறுப்பேற்க வைக்க வேண்டும்.
அவர்களுக்கு இரட்டிப்பு அபராதம் விதிக்க வேண்டும். பலிகடா ஆக்குவதை நிறுத்துங்கள். இது உண்மையான தீர்வு அல்ல. வீரர்கள் ஏன் எப்போதும் கஷ்டப்பட வேண்டும்?" என தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரிதாகவே போட்டியில் இடம்பெறும் வீரர்களும் நிதி அபராதங்களை எதிர்கொள்ள வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல் மற்றொரு முன்னாள் வீரரான ஷோயப் அக்தரும் விமர்சித்துள்ளார்.
முன்னதாக அவர், அரையிறுதிக்கு முன்னேறத் தவறியபோது அணி நிர்வாகம் மற்றும் தேர்வு முடிவுகளை கேள்வி எழுப்பியிருந்தார்.
முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்து விமர்சனங்கள் அதிகரித்து வருவதால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அணி மேலாண்மை மற்றும் தேர்வு உத்தியை மதிப்பாய்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire