டி20 உலகக்கிண்ணத்தை புறக்கணிக்கும் பாகிஸ்தான்... இறுதி முடிவு எப்போது?
1 மாசி 2026 ஞாயிறு 13:06 | பார்வைகள் : 2211
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் டி20 உலகக்கிண்ணத்தை புறக்கணிப்பதாக உலவும் செய்திக்கு முடிவு கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
வங்காளதேச கிரிக்கெட் அணி பாதுகாப்பு காரணங்களைக் காட்டி, டி20 உலகக்கிண்ணப்போட்டியை இந்தியாவில் விளையாட மறுப்பு தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து, வங்காளதேசத்திற்கு பதிலாக ஸ்கொட்லாந்தை சேர்த்து அதிரடி நடவடிக்கை எடுத்தது ஐசிசி. இதற்கிடையில் வங்காளதேசத்திற்கு ஆதரவாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நின்றது.
அதன் தலைவர் மொஹ்சின் நக்வி (Mohsin Naqvi), ஐசிசியின் நடவடிக்கை நியாயமற்றது என்று கூறியதுடன் தங்கள் அரசின் ஒப்புதலைப் பொறுத்தே பாகிஸ்தானின் பங்கேற்பு அமையும் என்று குறிப்பிட்டார்.
இது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தவே, பாகிஸ்தான் அணி டி20 உலகக்கிண்ணத்தில் பங்கேற்குமா என்ற கேள்வி நிலவி வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் ஊடகமான ARY News-யின்படி, உயர்மட்ட ஆலோசனைகளுக்கு பிறகு, 2026 டி20 உலகக்கிண்ணத்தில் பாகிஸ்தானின் பங்கேற்பு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிப்ரவரி 2ஆம் திகதி (நாளை) அன்று இறுதி முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்த பின் பாகிஸ்தான் அணியின் பங்கேற்பு குறித்த இறுதி முடிவு ஜனவரி 30 அல்லது பிப்ரவரி 2 அன்று எடுக்கப்படும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டதாக, நக்வி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire