பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா ?
5 மாசி 2026 வியாழன் 15:10 | பார்வைகள் : 2784
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சமையல்களில் முக்கிய இடம் பெறுவது பூண்டு. அதேநேரம் சாப்பிடும் போது பூண்டை ஒதுக்கி வைக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது.. அதற்கு காரணம் பூண்டில் இருக்கும் நன்மைகள் யாருக்கும் தெரிவதில்லை. காலை எழுந்தவுடன் ஒரு பூண்டு சாப்பிடுவதால் உடலில் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்..
நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக மாற்றும். அதனால், சளி இருமல் போன்ற நோய் தொற்று பிரச்சனை இருக்கவே இருக்காது. உடலில் ரத்த அழுத்தம் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்தை காக்கும்.. ரத்த ஓட்டமும் சீராக இருக்கும்..
இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதால் ரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும்.. சர்க்கரை நோயாளிகளுக்கு பூண்டு அருமந்து..மனித உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றும்.. குறிப்பாக கல்லீரல் செயல்பாட்டை துரிதப்படுத்தும்.. செரிமான அமைப்பை சுத்தப்படுத்தும்.. உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும்..
மெட்டபாலிசத்தை ஊக்குவித்து உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வதை தடுக்கும்.. பசி உணர்வை கட்டுப்படுத்தும்.. சரும ஆரோக்கியத்திற்கு பூண்டு நல்லது முகப்பருவுக்கு காரணமான பாக்டீரியாவை அழிக்கும். அலர்ஜியை குறைத்து வயதான தோற்றத்தை ஏற்படுவதை தடுக்கும்,.
ஒன்று அல்லது இரண்டு பூண்டு பற்களை நசுக்கி சாப்பிடலாம்.. வெறும் வயிற்றில் சாப்பிட்டு விட்டு வெதுவெதுப்பான நீர் குடிக்கலாம்.. ஒரே நேரத்தில் அதிக பூண்டுகளை சாப்பிடும்போது அசிடிட்டி பிரச்சனை வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire