இந்தியா, பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா...? 24 மணித்தியாலம் முடிவு
9 மாசி 2026 திங்கள் 07:24 | பார்வைகள் : 1892
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவது குறித்து பாகிஸ்தான் 24 மணித்தியாலம் இறுதி முடிவெடுக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
2026 டி20 உலகக்கிண்ணத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி 15ஆம் திகதி நடைபெற உள்ளது.
ஆனால் இந்தப் போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அணி கூறியது, கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, இந்த போட்டி ரத்தானால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் என்ற கவலை எழுந்தது. இதற்காக பாகிஸ்தானின் லாகூரில் 5 மணிநேரத்திற்கும் மேலாக விவாதங்கள் நீடித்தது.
இதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி, ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் குவாஜா மற்றும் வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் அமினுல் இஸ்லாம் ஆகியோர் பங்கேற்றனர்.
அறிக்கைகளின்படி, இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பு PCB இப்போது பாகிஸ்தான் மத்திய அரசாங்கத்துடன் கலந்தாலோசிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அடுத்து 24 மணிநேரத்தில் பாகிஸ்தான் தீர்க்கமான முடிவை எடுக்கும் என்று கூறப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire