அர்ஜுன் டெண்டுல்கர் - சானியா திருமணம் - பிரதமர் மோடி, ராகுல் காந்தியை நேரில் அழைத்த சச்சின்
11 மாசி 2026 புதன் 10:08 | பார்வைகள் : 1878
சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுனின் திருமணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இளம் கிரிக்கெட் வீரர் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியா ஆகியோரின் திருமணம் சமீபத்தில் முடிவானது.
சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்துடன் சென்று பிரதமர் நரேந்திர மோடி உட்பட, அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பான புகைப்படங்களை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவில், "அர்ஜுன் மற்றும் சானியாவின் திருமணத்திற்கு மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்களை அழைப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.
இளம் தம்பதியினருக்கு உங்கள் ஆசீர்வாதங்களுக்கும், சிந்தனைமிக்க ஆலோசனைகளுக்கும் நன்றி மோடி ஜி" என தெரிவித்துள்ளார்.
மற்றொரு பதிவில், "எங்கள் குடும்பத்தினர் ஸ்ரீ ராகுல் காந்தி ஜி அவர்களை சந்தித்து, அர்ஜுன்-சானியாவின் திருமணத்திற்கு அழைக்கும் வாய்ப்பு கிடைத்தது. நீங்கள் எங்களுக்கு அளித்த அன்பிற்கும், விருந்தோம்பலுக்கு நன்றி" என கூறியுள்ளார்.
அதேபோல் ஜனாதிபதி திரௌபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் சச்சின் டெண்டுல்கர் குடும்பத்தினர் நேரில் அழைத்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire