இன்னும் 10 ஆண்டுகளில் நிலவில் வீடு கட்டுவோம்... எலான் மஸ்க் அறிவிப்பு
11 மாசி 2026 புதன் 10:12 | பார்வைகள் : 2473
10 ஆண்டுகளில் நிலவில் மனிதர்களை குடியேற்றுவோம் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கிய விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
அவரது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் இலக்காக செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றுவது ஆகும்.
இதற்காக அந்நிறுவனம் விண்வெளிக்கு சென்று மீண்டும் பூமிக்கும் திரும்ப கூடிய ஸ்டார்ஷிப் ரக விண்கலன்களை தயாரித்து வருகின்றனர்.
அத்துடன் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவிற்கு பால்கன், ராப்டர் போன்ற ராக்கெட்டுகளையும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
மேலும் எலான் மஸ்க் தன்னுடைய ஸ்பேஸ் எக்ஸ் என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் இந்தாண்டுக்குள் செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விண்கலனை அனுப்ப திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் இந்த தொலைநோக்கு திட்டம் தற்போது தள்ளிப் போவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
செவ்வாய் கிரகம் நிலவை விட அதிக தூரத்தில் இருப்பதால் நம்முடைய இலக்கை தற்போது நிலவுக்கு வைப்போம்.
இந்த ஆண்டு இறுதிக்குள் நிலவுக்கு நம்முடைய விண்கலனை அனுப்பி வைப்போம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நிலவில் தன்னிறைவு நகரத்தை உருவாக்கி அங்கு மனிதர்களை குடியேற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.
சீனா இந்த ஆண்டு இறுதிக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire