சர்ச்சையில் சிக்கிய இலங்கை வீரர் பானுக ராஜபக்சே
12 மாசி 2026 வியாழன் 04:46 | பார்வைகள் : 2087
இந்திய கிரிக்கெட் வீரர்களின் பேட்களில் ரப்பர் பூசப்பட்டுள்ளது என தான் கூறிய கருத்திற்கு, இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்சே விளக்கம் அளித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்சே இந்திய கிரிக்கெட் வீரர்களின் பேட்களின் தரம் குறித்து பேசிய கருத்து சர்ச்சையானது.
அவர்கள் (இந்திய வீரர்கள்) உயர்ந்த பேட்களை பயன்படுத்துகின்றனர் என்றும், அது அவர்களுக்கு கூடுதல் சக்தியை கொடுக்கும்; மற்றவர்களுக்கு கிடைக்காது என்றும் அவர் கூறினார்.
தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்று பானுக ராஜபக்சே விளக்கமளித்துள்ளார்.
அவர், "எனது கருத்து பாராட்டுவதை கொண்டது. இந்திய கிரிக்கெட் அதன் அமைப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு முதல், அதன் உபகரணத் தரநிலைகள் வரை நம்பமுடியாத அளவிற்கு முன்னேறியுள்ளது" என சமூக ஊடகத்தில் எழுதியுள்ளார்.
மேலும், தனது நேர்காணலின் சில பகுதிகள் மொழிபெயர்ப்பில் தொலைந்து போயின என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire