வேள்பாரி கதையின் நாயகன் யார்?
18 பங்குனி 2026 புதன் 12:24 | பார்வைகள் : 2361
'வேள்பாரி' கதையை எப்படியாவது சினிமாவாக்க வேண்டும் என்று கடும் முயற்சி செய்கிறார் இயக்குனர் ஷங்கர். கொரோனா காலத்திலேயே அந்த படத்துக்கு திரைக்கதை எழுதி விட்டதாக ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். அப்போதிலிருந்தே அந்த கதைக்கு தகுந்த ஹீரோவை தேட ஆரம்பித்தார். ஆரம்பத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் அந்த கதையில் நடிப்பதாக இருந்தது. ஆனால், அவர் ஏனோ மறுத்துவிட்டார். அடுத்து சூர்யாவை வைத்து அந்த படம் பண்ண நினைத்தார், அதுவும் நடக்கவில்லை.
ரஜினியை சந்தித்து கதை சொன்னார். அடுத்த படங்கள் காரணமாக அவரும் வேள்பாரியை நிராகரிக்க, தனுசிடம் சென்றார். அவரும் சில ஆண்டுகள் பிஸி என்று கூறிவிட்டால், யாரை வைத்து படம் பண்ணுவது என்று ஷங்கர் தவிக்கிறாராம். பெரிய பட்ஜெட் படமென்பதால் முன்னணி ஹீரோதான் நடிக்க வேண்டும் என்பதில் ஷங்கர் உறுதியாக இருக்கிறாராம். இதற்கிடையில், வேள்பாரி படத்தை தயாரிப்பது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஷங்கரின் கடைசி சில படங்கள் சரியாக போகவில்லை. வேள்பாரியை தயாரிக்க பல நுாறு கோடி பட்ஜெட் தேவைப்படும். ஷங்கரை நம்பி அந்த முதலீட்டை போடுபவர் யாராக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 3' படப்பிடிப்பு பாதியில் நிற்பது தனிக்கதை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire