உலகின் தலைசிறந்த வீரர் எம்பாப்பே - இரட்டை கோல் அடித்து மிரட்டிய இளம் வீரர்
19 பங்குனி 2026 வியாழன் 04:58 | பார்வைகள் : 1968
மான்செஸ்டர் சிட்டிக்கு எதிரான வெற்றிக்கு பின் இளம் வீரர் வினிசிஸ் ஜூனியர், சக அணி வீரரான கைலியன் எம்பாப்பேயை பாராட்டினார்.
எதிஹாத் மைதானத்தில் நடந்த சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் மற்றும் மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதின.
ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் வினிசிஸ் ஜூனியர் (Vinicius Junior) தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார்.
அதற்கு பதிலடியாக மான்செஸ்டர் சிட்டி வீரர் எர்லிங் ஹாலண்ட் (Erling Haaland) 41வது நிமிடத்தில் அசால்ட்டாக கோல் அடித்தார்.
இதன்மூலம் முதல் பாதி 1-1 என சமநிலையில் முடிந்தது. இரண்டாம் பாதியில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இறுதியாக 90+3வது நிமிடத்தில், ஃபெடெரிகோ பாஸ் செய்த பந்தை வினிசியஸ் ஜூனியர் வலையை நோக்கி கிக் செய்ய, அது கோல் கீப்பர் மீது பட்டு திரும்பி வந்தது.
ஆனாலும், உடனே வினிசியஸ் அந்த பந்தை விரைந்து வலைக்குள் தள்ள, அது அணியின் வெற்றி கோலாக மாறியது. ஆட்டநேர முடிவில் ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்தியது.
பின்னர் காயத்தில் இருந்து மீண்டு வந்த சக அணி வீரரான கைலியன் எம்பாப்பேயை இளம் வீரர் வினிசியஸ் ஜூனியர் பாராட்டினார். அவர், "எம்பாப்பே உண்மையிலேயே ஒரு சிறந்த வீரர், அவர் உலகின் சிறந்த வீரர்" என்று குறிப்பிட்டார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire