எனக்கு எந்த வருத்தமும் இல்லை - நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை - மௌனம் கலைத்த சுப்மன் கில்
27 பங்குனி 2026 வெள்ளி 08:48 | பார்வைகள் : 2139
உலகக்கிண்ணத்தில் தொடரில் விளையாட இடம் கிடைக்காதது குறித்து சுப்மன் கில் மனம் திறந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான சுப்மன் கில் (Shubman Gill) டி20 உலகக்கிண்ணத் தொடரில் விளையாடவில்லை.
இதுகுறித்து எந்த கருத்தும் அவர் கூறாமல் இருந்த நிலையில் தற்போது மௌனம் கலைத்துள்ளார்.
அணியில் இடம்பெறாததில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "கடந்த 3-4 சீஸன்களாக ஐபிஎல் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறேன். நான் யாருக்கும் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.
இந்த முறை ஐபிஎல் கிண்ணத்தை நாங்களே (குஜராத் டைட்டன்ஸ்) கைப்பற்றுவோம்" என தெரிவித்துள்ளார்.
சுப்மன் கில் இதுவரை 118 ஐபிஎல் போட்டிகளில் 3,866 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 4 சதங்கள் மற்றும் 26 அரைசதங்கள் அடங்கும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire