சிவகார்த்திகேயனை நிராகரித்த அஸ்வத் மாரிமுத்து ?
3 சித்திரை 2026 வெள்ளி 16:24 | பார்வைகள் : 2112
டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் சிவகார்த்திகேயன். இவரின் வளர்ச்சியை பார்த்து இவருக்கு முன்னால் சினிமாவுக்கு வந்தவர்கள் பலருமே பொறாமைப்பட்டனர். தற்போது 50 முதல் 60 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகராக அவர் மாறியிருக்கிறார். அதேநேரம் அவரிடம் ஒரு பிரச்சனை உண்டு.
ஹிட் படங்களை கொடுக்கும் இளம் இயக்குனர்களை அழைத்து நாம சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம் என்பார். அந்த இயக்குனரும் ஆவலுடன் கதையை உருவாக்குவார். ஆனால், சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களை புக் செய்து நடித்துக்கொண்டே இருப்பார். அந்த இயக்குனர் சில வருடங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.
அயலான் ரவிக்குமார், ராம்குமார் பாலகிருஷ்ணன், சிபிச் சக்ரவர்த்தி, வெங்கட்பிரபு என சிவகார்த்திகேயனால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் இருக்கிறார்கள். இந்நிலையில்தான், டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
ஆனால், சிவகார்த்திகேயனை நம்பி போனால் 2 வருடங்கள் உட்கார வைத்துவிடுவார் என சொல்லி அந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம் அஸ்வத் மாரிமுத்து. அஸ்வத் மாரிமுத்து அடுத்து சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கப்போவது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire