ஐபிஎல்லில் பானங்களைத் தூக்கும் அர்ஜுன் டெண்டுல்கர்
7 சித்திரை 2026 செவ்வாய் 14:51 | பார்வைகள் : 1966
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில், லக்னோ வீரர் அர்ஜுன் டெண்டுல்கர் பானங்களை எடுத்துச் செல்லும் காணொளி வைரலாகியுள்ளது.
ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் (Arjun Tendulkar) ஐபிஎல்லில் தனக்கான இடத்தைப் பிடிக்க போராடி வருகிறார்.
கடந்த மாதம் அவருக்கு திருமணம் முடிந்த நிலையில், லக்னோ சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணியில் விளையாட நடப்பு சீஸனில் அர்ஜுன் டெண்டுல்கர் களமிறங்கியுள்ளார்.
ஆனால், அவர் ஞாயிற்றுக்கிழமை நடந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், லக்னோவின் ஆடும் லெவனில் களமிறக்கப்படவில்லை.
எனினும், மைதானத்தில் தோன்றிய அவர் வீரர்களுக்காக பானங்களை எடுத்துச் சென்றது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
அவர் எல்லைக் கயிறுகளுக்கு அருகில் சென்றபோது, கூட்டத்தினர் அவரது பெயரை கோஷமிட்டனர்.
இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய ஜாம்பவான் வீரரின் மகனாக இருந்தாலும், கிரிக்கெட்டில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள கடின உழைப்பை அவர் தேர்ந்தெடுத்ததற்காக பலரும் அர்ஜுன் டெண்டுல்கரை பாராட்டுகின்றனர்.
அணிக்கு ஆதரவளித்து, திரைக்குப் பின்னாலும் கடின உழைப்பை தரும் அர்ஜுன் டெண்டுல்கரின் இந்த காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire