கொழும்பு புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் பொதுமக்கள் பாவனைக்கு திறப்பு
8 சித்திரை 2026 புதன் 15:15 | பார்வைகள் : 1824
கொழும்பு புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் புதுப்பிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று (8) கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, கொழும்பு மாநகர சபை மேயர் விராய் கெலி பல்தசார் மற்றும் இலங்கை விமானப்படைத் தளபதி பந்து எதிரிசிங்க உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
‘Clean Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டம், பொதுமக்களுக்கு மேம்பட்ட மற்றும் சௌகரியமான பஸ் நிலைய வசதிகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ், பஸ் நிலையக் கட்டடங்கள் புனரமைக்கப்பட்டதுடன், புதிய தகவல் மையம் நிறுவப்பட்டுள்ளது. அதேபோல், சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டதுடன், பஸ் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் அழகுபடுத்தப்பட்டுள்ளன.
இந்தப் பணிகளுக்காக இலங்கை விமானப்படை தனது பங்களிப்பை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மாற்றங்களுடன் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ள இந்த மத்திய பஸ் நிலையம், தினசரி பயணிகளுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire