நடிகை சுபாஷினி உடலை இலங்கை எடுத்துச் செல்வதில் சிக்கல்!
9 சித்திரை 2026 வியாழன் 16:45 | பார்வைகள் : 2634
இலங்கை நாட்டை சேர்ந்தவர் சுபாஷினி. 36 வயதான சுபாஷினி தமிழகத்தில் தங்கியிருந்து திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரைகளில் நடித்து வந்தார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் துணை நடிகையாக நடித்து வந்தார் சுபாஷினி.
பெங்களூரை சேர்ந்த பிபின் என்பவரை இரு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணமும் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் பெங்களூரில் வசித்து வந்த சுபாஷினி, படப்பிடிப்பு நேரங்களில் மட்டும் சென்னை வந்து நடித்து இருக்கிறார்.
இதற்காக சென்னை போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கலில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். கடந்த 3-ம் தேதி பெங்களூரில் இருந்து சென்னை வந்த நிலையில், நள்ளிரவில் கணவருடன் வீடியோ காலில் பேசும்போது குடும்ப பிரச்சினை காரணமாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த சுபாஷினி கணவருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டே வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பிபின் சந்திரன் இது குறித்து அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளிக்கு தகவல் தெரிவிக்க உயிரிழந்த நிலையில் சுபாஷினி மீட்கப்பட்டார்.
தற்போது அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தனியார் மையத்தில் பதப்படுத்தப்பட்டுள்ளது. அவரின் உடலை இலங்கை எடுத்துச் செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது. அதாவது போலீஸ் பதிந்துள்ள எஃப்ஐஆர்-ல் உள்ள பெயருக்கும் சுபாஷினியின் பாஸ்போர்ட்டில் உள்ள பெயருக்கும் வேறுபாடு இருப்பதால் உடலை எடுத்துச் செல்வதற்கான அனுமதி கிடைக்கவில்லை.
இதனையடுத்து இலங்கை எம்பி ஒருவரின் பரிந்துரையுடன் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில் முறையாக விண்ணப்பிக்க நடிகை சுபாஷினியின் குடும்பத்தினர் முயற்சி செய்து வருகின்றனர். இந்த தாமதம் காரணமாக நடிகை சுபாஷினியின் உடல் தற்போது பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தனியார் மையத்தில் பதப்படுத்தப்பட்டுள்ளது.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire