வவுனியாவில் சகோதரியை கொலை செய்த சகோதரன் கைது
9 சித்திரை 2026 வியாழன் 17:16 | பார்வைகள் : 2075
வவுனியா - செக்கடிப்புளவு பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான 56 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்.
மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக சகோதரர் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த பெண், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகநபரான பெண்ணின் சகோதரனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குற்றச்செயல் இடம்பெற்ற பகுதியில் பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் தடயங்களைச் சேகரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire