கணவரை பிரிந்தார் நடிகை ஹன்சிகா..!
11 பங்குனி 2026 புதன் 14:59 | பார்வைகள் : 2297
மங்களூரில் பிறந்து வளர்ந்த ஹன்சிகா மோத்வானி திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 2003 ஆம் ஆண்டு வெளியான ‘ஷக்கலக்க பூம்பூம்’ என்று தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர், 2007 ஆம் ஆண்டு தெலுங்கு படம் மூலமாக திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்தார். அதன் பின்னர் இவர் தமிழ், தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஹிந்தி போன்ற பல மொழிகளில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கும் தொழிலதிபர் சுஹேல் கத்தூரியா என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
சுஹேல் கத்தூரியாவிற்கு ஹன்சிகாவுடன் நடைபெற்றது இரண்டாவது திருமணமாகும். முன்னதாக ஹன்சிகாவின் நெருங்கிய தோழியான ரிங்கு என்பவரை சுஹேல் திருமணம் செய்திருந்தார். அந்த திருமணத்தில் ஹன்சிகாவும் கலந்து கொண்டார். பின்னர் சுஹேல் ரிங்கு தம்பதியினர் விவகாரத்துப் பெற்றனர். சில காலத்துக்கு பின்னால் சுஹேல் மற்றும் ஹன்சிகா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பின்னர் இருவரும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தனர். ஆனால் அப்பொழுது அடிக்கடி பிரச்சினை எழுந்த காரணத்தால் இருவரும் தனிக்குடித்தனம் சென்றனர்.
தனியாக வந்த பின்னரும் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் மற்றும் பிரச்சனைகள் எழுந்து கொண்டே இருந்தது. இதனால் இவர்கள் இருவரும் கலந்து பேசி பரஸ்பரம் பிரிந்து விடலாம் என்று முடிவெடுத்துள்ளனர். இந்த நிலையில் ஹன்சிகாவும் சுஹேல் கத்தூரியாவும் மும்பை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். மனுத்தாக்கலின் போதே தனக்கு ஜீவனாம்சம் எதுவும் வேண்டாம், விவாகரத்து மட்டும் கொடுத்தால் போதுமானது என்று ஹன்சிகா தெரிவித்துள்ளார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹன்சிகா மற்றும் சுஹேல் கத்தூரியாவிற்கு 2022 ஆம் ஆண்டு நடந்த திருமணம் ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பளித்துள்ளது.
சிறு சிறு விஷயங்களுக்காக விவாதம் ஏற்பட்டதாகவும், அதனால் ஒரு வீட்டில் சேர்ந்து வாழ்வது கடினமாக இருந்ததாகவும், இதையடுத்து விவாகரத்து பெற முடிவு செய்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4, 2022 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் நடைபெற்ற நிலையில் ஜூலை மாதம் 2024-ம் தேதியிலிருந்து இவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும், இருவருக்குள்ளும் கோபம், கருத்து வேறுபாடுகள், வாழ்க்கை முறையில் இருந்த வித்தியாசம் ஆகியவற்றால் இந்த திருமணம் நிலைக்காது என்ற முடிவுக்கு வந்ததாகவும் ஹன்சிகா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியிருக்கிறார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருந்து சுஹேல் கத்தூரியா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், திருமண வீடியோக்களையும் நீக்கி இருந்தார். அப்போது இருந்தே விவாகரத்து செய்து தீயாய் பரவி வந்த நிலையில் தற்போது நீதிமன்றம் மூலமாக இருவரும் பரஸ்பரம் பிரிந்து இருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire