பந்தை எடுக்க முயன்று சர்ச்சை ரன்அவுட் - பாகிஸ்தான் வீரர் விளக்கம்
14 பங்குனி 2026 சனி 13:00 | பார்வைகள் : 1932
வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் சர்ச்சைக்குரிய ரன்-அவுட் குறித்து, பாகிஸ்தானின் துடுப்பாட்ட வீரர் சல்மான் ஆகா விளக்கம் கொடுத்துள்ளார்.
டாக்காவில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 128 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் பாகிஸ்தானின் சல்மான் அலி ஆகா (Salman Ali Agha) 62 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்கள் எடுத்தார்.
அணியின் ஸ்கோர் 231 ஆக இருந்தபோது, ரிஸ்வான் அடித்த பந்து சல்மான் அலி ஆகாவை நோக்கி வர, மெஹிதி ஹசன் மிராஸ் அதனை தடுக்கப் பார்த்தார். அப்போது சல்மான் மீது அவர் மோதினார்; பந்து அங்கேயே நின்றது.
உடனே சல்மான் அதனை குனிந்து எடுக்கப் போக, மிராஸ் குறுக்கிட்டு பந்தை எடுத்து ரன்அவுட் செய்தார்.
அதனைத் தொடர்ந்து களத்தைவிட்டு வெளியேறும்போது சல்மான் அலி ஆகா ஆவேசமாக மிராஸை நோக்கி பேசினார்.
இதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி சல்மான் அலி ஆகா கிண்டலுக்கு ஆளானார்.
இந்த நிலையில், சல்மான் அலி ஆகா சர்ச்சைக்குரிய ரன்அவுட் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர், ஆட்டத்தின் பரபரப்பான தருணத்தில் நிலைதடுமாறியதால், மெஹிதி ஹசன் மிராஸை நோக்கி சீறிப் பாய்ந்தேன்.
உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன், நான் நடந்துகொண்ட விதம் வேறுவிதமாக இருந்திருக்க வேண்டும். விளையாட்டு வீரர் மனப்பான்மை இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பந்தை மெஹிதிக்கு திருப்பித்தர முயற்சித்தேன் என்கிறார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire