சாம்பார் சிக்கன் பிரியாணி எப்படி செய்யணும் தெரியுமா ?
15 பங்குனி 2026 ஞாயிறு 11:22 | பார்வைகள் : 2168
சாம்பார் சிக்கன் பிரியாணி என்பது சீரக சம்பா அரிசியில் இஞ்சி, பூண்டு சேர்க்காமல் சாம்பார் பொடியுடன் சிக்கன், தக்காளி , வெங்காயம் சேர்த்து செய்யப்படும் தனித்துவமான சுவையை கொண்ட உணவாகும்.
செய்முறை: சிக்கன், சீரக சம்பா அரிசி, துவரம் பருப்பு, நெய், கருவேப்பிலை, கொத்தமல்லி, கடுகு, வரமிளகாய், சின்ன வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி.
தேவையான பொருட்கள்: சீரகசம்பா அரிசி மற்றும் துவரம் பருப்பு எடுத்து தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து நெய் ஊற்றி கருவேப்பிலை மற்றும் கடுகு ஆகியவற்றை சேர்த்து கொண்டு தோலை நீக்கிய சின்ன வெங்காயம் மற்றும் வரமிளகாய் இரண்டாக உடைத்தது கடாயில் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
நன்றாக வதக்கப்பட்ட பின் தக்காளி நறுக்கி அதில் சேர்த்து அத்துடன் கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து சாம்பார் பொடியை தூவி மசாலா முழுவதும் படும் படி நன்றாக மிக்ஸ் செய்து பெரட்டி கொண்டு வதக்கி கொள்ளவும்.
இதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து மசாலா சிக்கன் முழுவதும் படும்படி கிளறி விடவும். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொண்டு ஊற வைத்த அரிசி மற்றும் துவரம் பருப்பினை சேர்த்துக் கொண்டு கொதிக்க விடவும். கொதித்த பிறகு 10 நிமிடம் வரை தம்மில் வைத்து எடுத்து நெய் ஊற்றி சாப்பிட்டால் கமகமன்னு சாம்பார் மற்றும் சிக்கன் மனம் மனக்க சுவையான சாம்பார் பிரியாணி ரெடியா இருக்கும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire