இடைக்காலக் குழுவை நியமிக்கும் இலங்கை அரசாங்கம்? வெளியான தகவல்
29 சித்திரை 2026 புதன் 14:47 | பார்வைகள் : 1846
இலங்கை அரசாங்கம் தற்போது ஒரு இடைக்காலக் குழுவை நியமிக்க வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.
இலங்கை கிரிக்கெட்டில் நிதி முறைகேடுகள் குறித்த தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதனைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா பதவி விலகுவதாக அறிவித்தார்.
இதுதொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமையன்று நாட்டின் ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க மற்றும் ஷம்மி சில்வா இருவரும் சந்தித்து பேசினர்.
அதனைத் தொடர்ந்து, புதன்கிழமையன்று தலைவர் ஷம்மி சில்வா மற்றும் சபையின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
SLC வெளியிட்ட ஊடக அறிக்கை ஒன்றில், "இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஏனைய சபை நிர்வாகிகள், நிர்வாகக் குழு உறுப்பினர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை சமர்பித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த முடிவுகள் ஜனாதிபதி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது அதற்கு முந்தைய நாள் நடைபெற்ற ஒரு சிறப்புக் குழு கூட்டத்தில் முறைப்படி அங்கீகரிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கம் தற்போது ஒரு இடைக்காலக் குழுவை நியமிக்க வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.
அந்தக் குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான Sidath Wettimuny மற்றும் Roshan Mahanama ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire