OpenAI உருவாக்கும் AI ஸ்மார்ட்போன் - Apple, Samsung நிறுவனங்களுக்கு சவால்
6 வைகாசி 2026 புதன் 15:39 | பார்வைகள் : 2247
உலகின் முன்னணி AI நிறுவனமான OpenAI, புதிய வகை ஸ்மார்ட்போனை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்த போன், வழக்கமான ஆப்ஸ் அடிப்படையிலான முறையை விட்டு விலகி, AI ஏஜென்ட் அடிப்படையிலான முறையில் இயங்கும்.
அதாவது, பயனர்கள் தனிப்பட்ட ஆப்ஸ்களை திறக்காமல், AI Assistant-களிடம் நேரடியாக கேட்டு, தேவையான பணிகளைச் செய்ய முடியும்.
இந்த திட்டத்திற்காக OpenAI, MediaTek மற்றும் Qualcomm நிறுவனங்களுடன் இணைந்து, AI-க்கு ஏற்ற சிப் செட்களை உருவாக்குகிறது.
மேலும், Luxshare என்ற நிறுவனம் உற்பத்தி இணைந்து செயல்பட உள்ளது. Luxshare, ஆப்பிள் தயாரிப்புகளையும் உருவாக்கும் நிறுவனம் என்பதால், OpenAI-க்கு பெரிய அளவில் உற்பத்தி செய்யும் திறன் கிடைக்கும்.
இந்த AI ஸ்மார்ட்போன், 2028-ஆம் ஆண்டில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“புதிய போன், AI-ஐ மையமாகக் கொண்டு, பயனர்களின் வாழ்க்கையை எளிதாக்கும்” என OpenAI தெரிவித்துள்ளது.
ஆப்பிள் மற்றும் சாம்சங் தற்போது AI அம்சங்களை தங்களது போன்களில் சேர்த்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் OpenAI, முழுமையாக AI அடிப்படையிலான போனை உருவாக்குவதால், இது ஸ்மார்ட்போன் உலகில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire