Val-d’Oise: காவல்துறை அதிகாரி ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டுத் தற்கொலை!!
10 வைகாசி 2026 ஞாயிறு 14:32 | பார்வைகள் : 4049
Villers-en-Arthies என்ற கிராமத்தில், Vexin பகுதியில் நடந்துள்ளது. Hauts-de-Seine பகுதியில் பணியாற்றிய 42 வயதான ஒரு நகராட்சி காவலர், தனது முன்னாள் மனைவியையும் இரு குழந்தைகளையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பின்னர் தன்னையும் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
சனிக்கிழமை அன்று Villers-en-Arthies கிராமம் முழுவதும் காவல்துறையினரின் வாகனங்கள் நிறைந்து, பெரும்பாலும் முடக்கப்பட்ட நிலை காணப்பட்டது. குழந்தைகள் 9 மற்றும் 13 வயதுடையவர்கள். தம்பதியினர் பிரிவு நிலைமையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை அரசு வழக்கறிஞர் அலுவலகமும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், நகராட்சி காவலராக பணியாற்றிய அந்த நபரின் மனைவி, வெள்ளிக்கிழமை குழந்தைகளை அவரிடம் ஒப்படைக்க அவரது வீட்டிற்கு சென்றிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. அந்த நபர் Clichy-la-Garenne பகுதியில் பணியாற்றி வந்தார்.
உடல்கள் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், சம்பவ இடத்தில் ஒரு துப்பாக்கி மீட்கப்பட்டதாகவும் Guirec Le Bras, Pontoise குடியரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த விசாரணை Brigade des recherches de Pontoise மற்றும் Section de recherches de Versailles ஆகிய பிரிவுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
அந்த கிராமத்தின் மேயர் Jean‑François Renard கூறுகையில், அந்த குடும்பம் கடந்த பத்து ஆண்டுகளாக Villers-en-Arthies பகுதியில் வசித்து வந்ததாக தெரிவித்தார். “இது மிகவும் துயரமான சம்பவம்,” என்று அவர் வருத்தம் தெரிவித்ததுடன், மனநல ஆலோசனை வழங்கும் உளவியல் ஆதரவு மையம் திறக்கப்படவுள்ளதாகவும் அறிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire