தோல்வி குறித்து பேசிய அணித்தலைவர் சூர்யகுமார்
11 வைகாசி 2026 திங்கள் 13:10 | பார்வைகள் : 2004
தவறான நேரங்களில் விக்கெட்டுகள் வீழ்ந்ததுதான் தோல்விக்கு காரணம் என மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.
ராய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது.
மும்பை இந்தியன்ஸ் நிர்ணயித்த 167 ஓட்டங்கள் இலக்கினை, பெங்களூரு அணி கடைசி பந்தில் எட்டி த்ரில் வெற்றி பெற்றது.
11 போட்டிகளில் 8வது தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணி தொடரை விட்டு வெளியேறியது.
தோல்விக்கு பின் பேசிய மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ், "நாங்கள் 10 முதல் 15 ஓட்டங்கள் குறைவாகவே எடுத்திருந்தோம் என்று நான் நினைக்கிறேன். அதுதான் என் கணிப்பு.
தவறான நேரங்களில் விக்கெட்டுகள் வீழ்ந்தது இதற்கு ஒரு காரணம். ஆனால், நமன் மற்றும் திலக் ஆகியோர் துடுப்பாடிய விதம் இந்த ஆடுகளத்தில் மிக அழகாக அமைந்திருந்தது; அது அவர்களின் சிறப்பான மன உறுதியை வெளிப்படுத்தியது" என்றார்.
மேலும், சக அணி வீரர் ராஜ் பாவா குறித்து அவர் கூறியபோது, "இந்த சீஸன் முழுவதும், ஏன் கடந்த ஆண்டும் கூட, ராஜ் பாவா இதற்காக (கடைசி ஓவரை வீசியவர்) மிக சிறப்பாக பயிற்சி செய்து வந்திருக்கிறார் என்று நான் கருதுகிறேன். இந்த ஆண்டு நாங்கள் அவரைப் பார்த்தபோது, அவர் முற்றிலும் மாறுபட்ட ஒரு ஆல்-ரவுண்டராகத் திகழ்ந்தார்" என்றார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire