ஆப்ரிக்காவில் 23 பில்லியன் யூரோக்களில் முதலீடுகள் - ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவிப்பு!!
12 வைகாசி 2026 செவ்வாய் 07:30 | பார்வைகள் : 2937
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தலைமையிலான குழு தற்போது Nairobi நகரில் நடைபெறும் ஆப்ரிக்கா–பிரான்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்று வருகிறது. “Africa Forward” எனப்படும் இந்த மாநாடு முதன்முறையாக ஆங்கில மொழி பேசும் Kenya நாட்டில் நடைபெறுகிறது. இளைஞர்கள், விளையாட்டு, கலாசாரம் மற்றும் வணிகம் தொடர்பான அமர்வுகளுடன் மாநாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டின் முதல் நாளிலேயே ஆப்ரிக்க நாடுகளுக்காக மொத்தம் 23 பில்லியன் யூரோக்களில் முதலீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 14 பில்லியன் யூரோக்களை பிரெஞ்சு அரசும் தனியார் துறையும் முதலீடுகள் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி மாற்றுத் திட்டங்கள், டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு, கடல் பொருளாதாரம், வேளாண்மை மற்றும் சுகாதாரத் துறைகள் முக்கிய முதலீட்டு பிரிவுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் , “ஆப்ரிக்காவுக்கு பொதுத் துணை உதவிகளை விட முதலீடுகளே அதிகம் தேவையாக உள்ளன” என்று தெரிவித்தார். மேலும், இந்த முதலீட்டு திட்டங்கள் மூலம் ஆப்ரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire