மகனை கிரிக்கெட் வீரராக்க சிறை சென்ற தந்தை - முகுல் சௌத்ரியின் பின்னணி
11 சித்திரை 2026 சனி 15:25 | பார்வைகள் : 1922
2026 ஐபிஎல் தொடரில், KKR அணிக்கு எதிரான போட்டியில், LSG வீரர் முகுல் சௌத்ரி 27 பந்துகளில் 2 பவுண்டரி, 7 சிக்ஸர் உட்பட 54 ஓட்டங்கள் விளாசி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.
மேலும், அந்த போட்டிக்கான ஆட்ட நாயகன் விருதும் முகுல் சௌத்ரிக்கு வழங்கப்பட்டது.
தனது முதல் ஐபிஎல் தொடரிலே 7 சிக்ஸர்கள் விளாசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் 21 வயதான முகுல் சௌத்ரி.
முகுல் சௌத்ரியை கிரிக்கெட் வீரராக்கும் முயற்சியில் அவரின் தந்தை சிறைக்கு செல்லும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
கிராமத்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்த தலிப் சௌத்ரிக்கு தனக்கு மகன் பிறந்தால் அவனை கிரிக்கெட் வீரர் ஆக்க வேண்டும் என்ற கனவில் இருந்துள்ளார்.
2003 ஆம் ஆண்டில் பட்டம் பெற்ற தலிப் சௌத்ரிக்கு அதே ஆண்டில் திருமணமும் ஆனது. அடுத்த ஆண்டில் முகுல் சௌத்ரி பிறந்துள்ளார்.
அப்போதே, கிரிக்கெட்டில் இத்தனை பேர் சாதிக்கும்போது, என் மகனால் ஏன் முடியாது? என அவனை ஒரு கிரிக்கெட் வீரனாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று முடிவு செய்துள்ளார்.
அந்தக் கனவை நனவாக்க ஒரு நிலையான வருமானத்தை உருவாக்க முயன்றார். ராஜஸ்தான் நிர்வாக சேவைத் தேர்வுக்கு 6 ஆண்டுகள் தயாராகியும் தேர்ச்சி பெற முடியவில்லை. பின்னர் ரியல் எஸ்டேட் தொழில் செய்த போதும் நிலையான வருமானம் கிடைக்கவில்லை.
2016 ஆம் ஆண்டில் தனது வீட்டில் இருந்து 60 கிமீ தொலைவில் உள்ள SBS கிரிக்கெட் அகாடமியில் முகுல் சௌத்ரியை சேர்த்துள்ளார்.
ஆனால், போதுமான பொருளாதரம் இல்லாததால், தன்னுடைய வீட்டை சுமார் ரூ.21 லட்சத்திற்கு விற்றுள்ளார். மேலும், ஹோட்டல் தொழில் தொடங்க வங்கியிடம் ரூ.1 கோடி கடனும், நண்பர்கள் மற்றும் சகோதர்கள் என தனிபர்களிடம் 3 கோடியும் கடன் பெற்றுள்ளார்.
ஹோட்டல் தொழிலிலும் நிலையான வருமானம் பெற முடியாத நிலையில், ஒரு கட்டத்தில் கடனை திருப்பி செலுத்தாததால் முகுல் சௌத்ரி சிறை செல்ல நேரிட்டது. ஆனால் அவர் எந்த குற்ற காரணங்களுக்காகவும் சிறை செல்லவில்லை.
அதன் பிறகு வெளியே வந்த அவர், ஜெய்ப்பூரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஆரவல்லி கிரிக்கெட் அகாடமிக்கு முகுலை மாற்றினார். அவர் விளையாடுவதை பார்த்து, தலிப் சௌத்ரிக்கு நம்பிக்கை பிறந்துள்ளது.
அதன் பின்னர், யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் நடத்திய 14 நாள் விடுமுறைக்கால முகாமில் முகுலை சேர்த்தார். அந்த முகாமிற்காக அவருக்கு 2.5 லட்சம் ரூபாய் செலவான நிலையில், அதற்காக தலிப் மீண்டும் கடன் வாங்கினார்.
சில மாதங்களுக்குப் பிறகு, அவர் மும்பைக்கு வந்து ரோஹித் ஷர்மாவின் பயிற்சியாளரான தினேஷ் லாடை சந்தித்தார். அப்போது, தென் மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் குருகிராமில் ஒரு அகாடமி நடத்தி வருவதாக யாரோ அவரிடம் கூற, சிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதற்காக முகுலை அங்கு அனுப்ப முடிவு செய்தார்.
14 நாள் விடுமுறைக்கால முகாமில் ஒருநாள் தலிப்பை யோக்ராஜ் அழைத்து உங்கள் மகன் ஒருநாள் இந்திய அணிக்காக விளையாடுவான் என தெரிவித்துள்ளார்.
முகுல் எங்கு பயிற்சிக்கு சென்றாலும், அவுன் சிறப்பாக விளையாடுவதையும், அவன் சரியாக உணவு உண்பதையும் கண்காணிக்க தலிப்பும் உடன் சென்றுள்ளார்.
நீயே உன் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டாய், இப்போது உன் மகனை விட்டுவிடு என அவரது உறவினர்கள் முகத்திற்கு நேராகவே கடுமையாக விமர்சித்துள்ளனர்.
ஒரு பக்கம் கடன்கள் அதிகரித்தாலும், தன் மகன் ஒருநாள் இலக்குகளை அடைவான் என மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார்.
அதே போல், 2022 - 23 ரஞ்சி தொடர், 2025 - 26 விஜய் ஹசாரே கோப்பை ஆகியவற்றில் அணியில் இடம் பிடித்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதில், 2 சதங்கள், 4 அரைசதங்கள் உட்பட 617 ஓட்டங்களை 142.49 ஸ்டிரைக் ரேட்டில் எடுத்தார். மேலும், 39 சிக்ஸர்களை விளாசி, இத்தொடரில் அதிகபட்ச சிக்ஸர் அடித்த வீரராக திகழ்ந்தார்.
இவரின் ஆட்ட திறனை கண்ட ராஜஸ்தான் அணி பயிற்சியாளர் சையத் முஷ்டாக் அலி கோப்பையில் காயம் காரணமாக விலகிய கார்த்திக் ஷர்மாவுக்குப் பதிலாக இவரைத் தேர்ந்தெடுத்தார்.
5 போட்டிகளில் விளையாடி, 198.85 ஸ்டிரைக் ரேட்டில் 173 ரன்கள் எடுத்தார். "டெல்லிக்கு எதிரான போட்டியில் நாங்கள் வெற்றி பெற 26 ரன்கள் தேவைப்பட்டது, 4 சிக்ஸர்களை அடித்து ஆட்டத்தை முடித்து வைத்து, வெற்றியை தனது ஆதர்ச நாயகன் தோனிக்கும் தந்தைக்கு சமர்ப்பித்தார்.
ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் LSG அணி ரூ2.6 கோடிக்கு வாங்கியது. SRH அணிக்கு எதிரான போட்டியில், 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்த முகுல் சௌத்ரி போட்டிக்கு பின்னர் உடைந்து அழுதுள்ளார். அடுத்த போட்டியில் கண்டிப்பாக எனது திறமையை நிருபிப்பேன் என தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
சொன்னது போல், KKR அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியான ஆட்டம் மூலம் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். மேலும், இந்திய அணிக்காக விளையாடுவதே தனது இலக்கு என தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire