வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
14 சித்திரை 2026 செவ்வாய் 15:25 | பார்வைகள் : 1779
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த 'குஷ்' போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவரை சுங்கப் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 24 வயதுடைய இந்தியப் பிரஜை என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் இந்த போதைப்பொருள் தொகுதியை தாய்லாந்தின் பெங்கொக் நகரில் கொள்வனவு செய்து, பின்னர் மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்குச் சென்று, அங்கிருந்து மலேசிய ஏர்லைன்ஸின் MH-179 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த பயணப் பையினுள் இருந்த அட்டைப் பெட்டியின் பக்கச்சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த நிலையில், சுமார் 2 கோடியே 8 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான 02 கிலோ 87 கிராம் எடையுள்ள 'குஷ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், மேலதிக விசாரணைகளுக்காக குறித்த பயணி மற்றும் போதைப்பொருள் தொகுதி கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire