இலங்கையில் இருந்த விசேட விமானம் மூலம் 240 ஈரான் கடற்படையினர் தாய்நாடு திரும்பினர்
14 சித்திரை 2026 செவ்வாய் 20:11 | பார்வைகள் : 2190
இலங்கையின் பாதுகாப்பில் இருந்த ஈரான் கடற்படையைச் சேர்ந்த 240 வீரர்கள் இன்று (ஏப்ரல் 14) விசேட விமானம் மூலம் மீண்டும் ஈரான் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளான ஈரான் கடற்படையின் 'IRIS Dena' கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 வீரர்களும் இவர்களில் அடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரான் கடற்படைக்குச் சொந்தமான 'IRIS Bushehr' கப்பலில் இருந்த 204 வீரர்களும் இன்று நாடு திரும்பிய கடற்படையினருடன் இணைந்து பயணித்துள்ளனர்.
இந்தத் தகவலைப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான அருண ஜயசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து விசேட 'டர்கிஷ்' (Turkish) விமானம் மூலம் இவர்கள் ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சர்வதேசப் பதற்றங்களுக்கு மத்தியில் இலங்கையில் தங்கியிருந்த இக்கடற்படையினர், உரிய இராஜதந்திர நடவடிக்கைகளுக்குப் பிறகு பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire