மத்திய கிழக்கில் போர் ஆரம்பமானதன் பின்னர் இலங்கை செல்லும் முதல் கப்பல்
16 சித்திரை 2026 வியாழன் 14:42 | பார்வைகள் : 1786
மத்திய கிழக்கில் போர் மோதல்கள் ஆரம்பமானதன் பின்னர், கச்சா எண்ணெயுடன் வரும் முதலாவது கப்பல் நாளை நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கப்பல் மூலம் 97,500 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக அதன் முகாமை பணிப்பாளர் கலாநிதி மயூரா நெத்திகுமார தெரிவித்தார்.
அத்துடன், இம்மாத இறுதியில் மற்றுமொரு கப்பலும் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
"யுத்த நிலைமையின் பின்னர் இலங்கைக்கு வரும் கச்சா எண்ணெய் கப்பல் 97,500 மெட்ரிக் தொன் எண்ணெயுடன் நாட்டை வந்தடைகிறது. அதேபோல் இம்மாத இறுதியில் மற்றுமொரு கப்பலும் வரவுள்ளது. அத்துடன் அமெரிக்காவிலிருந்து வரும் WTI கச்சா எண்ணெய் கப்பலில் தற்போது எண்ணெய் ஏற்றப்பட்டு வருகின்றது. அது இன்றைய தின அளவில் இலங்கையை நோக்கி தனது பயணத்தை ஆரம்பிக்கும். இதன் மூலம் இதுவரை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு பிரச்சினையாக இருந்த கச்சா எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்துவதில் இருந்த சிக்கல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது" என அவர் மேலும் தெரிவித்தார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire