பிள்ளையானின் சேவையை தேசிய மட்டத்தில் பாராட்டி கௌரவிக்க கோரும் மஹிந்த குழுவினர்
17 சித்திரை 2026 வெள்ளி 19:11 | பார்வைகள் : 1684
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் தற்போது வெலிசர கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இது முற்றிலும் தவறானது. கிழக்கு மாகாணத்தில் அரசியல் செல்வாக்கை வலுப்படுத்திக் கொள்வதற்காக ஒரு தரப்பின் கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றுகிறது.
விடுதலை புலிகள் அமைப்பை முற்றாக அழிப்பதற்கு இராணுவத்துக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையான் தேசிய மட்டத்தில் கௌரவிக்கப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனநாயகத்தை குழித் தோண்டி புதைக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. அரசாங்கத்தின் தன்னிச்சையான மற்றும் சர்வாதிகார செயற்பாடுகளினால் தனிமனித சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் அரசியல் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது.இதுவரையில் ஆட்சியில் இருந்த எந்தவொரு ஜனாதிபதியும் இவ்வாறு செயற்படவில்லை.
பொலிஸ் திணைக்களம் முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது.தேசிய மக்கள் சக்தியின் அரசியல் மேடைகளில் தேர்தல் பிரச்சாரம் செய்த நபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதானியாகவும், பிறிதொருவர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறான நிலையில் விசாரணைகள் எவ்வாறு சுயாதீனமாக இடம்பெறும் என்ற சந்தேகம் காணப்படுகிறது.
30 வருடகால யுத்தம் பற்றி தற்போதைய இளைஞர்கள் அறியமாட்டார்கள். அதன் கொடுமையை நாங்கள் நன்கு அறிவோம். விடுதலை புலிகள் அமைப்பை முற்றாக அழிப்பதற்கு பிள்ளையான் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். இராணுவத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்.
விடுதலை புலிகள் அமைப்பு பலவந்தமான வகையில் சிறுவர்களை தமது போராட்டத்துக்கு இணைத்துக் கொண்டது. பிள்ளையானும் சிறுவர் போராளியாக புலிகள் அமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்டார். 1991 முதல் 2004 ஆம் ஆண்டு வரை புலிகள் அமைப்பில் போராளியாக இருந்தார்.
விடுதலை புலிகள் அமைப்பின் செயற்பாடு நாட்டுக்கும்,நாட்டு மக்களுக்கும் ஒருபோதும் நன்மை பயக்காது என்பதை அறிந்த பிள்ளையான் ஜனநாயக பாதையை தெரிவு செய்து,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஒன்றிணைந்து இலங்கை இராணுவத்தினருக்கு ஆதரவாக செயற்பட்டார். விடுதலை புலிகள் அமைப்பு குறித்து பல தகவல்களை பிள்ளையான் வழங்கினார்.
பிள்ளையான் வழங்கிய தகவல்களை அடிப்படையாக கொண்டே இறுதிக்கட்டத்தில் யுத்தம் வெற்றிக் கொள்ளப்பட்டது. இதனால் தான் சிங்கள கிராமங்களுக்கு சவப்பெட்டிகள் செல்வதும் தடுக்கப்பட்டது. ஆகவே பிள்ளையானின் சேவையை தேசிய மட்டத்தில் பாராட்டி, கௌரவித்து, அவரை பாதுகாக்க வேண்டும்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் விவகாரத்தில் 19 ஆண்டுகளுக்கு பின்னர் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார். உப வேந்தர் காணாமலாக்கப்பட்ட விவகாரத்தில் எவ்வாறு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்வது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் தற்போது வெலிசர கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.இது முற்றிலும் தவறானது. கிழக்கு மாகாணத்தில் அரசியல் செல்வாக்கை வலுப்படுத்திக் கொள்வதற்காக ஒரு தரப்பின் கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றுகிறது. இதற்காக பிள்ளையான் பழிவாங்கப்படுகிறார்.
யுத்தத்தை வெற்றிக் கொள்வதற்கும், விடுதலைப் புலிகள் அமைப்பை அழிப்பதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பிள்ளையானை பாதுகாக்க வேண்டும். அவருக்காக நாங்கள் முன்னிலையாவோம்.அவருக்காக குரல் கொடுப்போம் என்றார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire