இலங்கையில் ரஷ்ய பெண்ணுக்கு நேர்ந்த கதி
19 சித்திரை 2026 ஞாயிறு 17:52 | பார்வைகள் : 1736
பெலியத்தையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் மோதி ரஷ்ய யுவதி ஒருவர் உயிரிழந்தார்.
அஹங்கம, கபலான புகையிரத கடவையில் இன்று (19) முற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் மின்சார மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் 23 வயதுடைய ரஷ்ய பெண் ஒருவரே உயிரிழந்தார்.
எவ்வாறாயினும் விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், புகையிரத கடவையின் சமிக்ஞை விளக்குகள் இயங்கிய நிலையில் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் அஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire